புகார் பெட்டி


புகார் பெட்டி
x

புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

மதுரை


தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

எரியாத தெருவிளக்குகள்

மதுரை மாவட்டம் வார்டு 70-ல் தாமஸ் குறுக்கு தெரு எண்ணெய் செக்கு வீதி அருகில் பாதாள சாக்கடை எண் 2,3 மற்றும் 4-வது ஜங்ஷன்களில் சாக்கடை நிரம்பி கழிவுநீரானது வெளியேறி வருகிறது. மேலும் அப்பகுதியில் உள்ள தெருவிளக்குகள் ஒளிரவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதியில் அடிப்படை வசதிகளை சீரமைக்க வேண்டும்.

ராமகிருஷ்ணன், மதுரை.

தொற்று நோய் அபாயம்

மதுரை மேலஅனுப்பானடி 87-வது வார்டு பள்ளிவாசல் தெருவில் உள்ள வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியில் உள்ள கழிவுநீர் தொட்டியானது சேதமடைந்து நீரனாது அதிலிருந்து வெளியேறி வருகிறது. இதனால் அப்பகுதியில் கழிவுநீரானது தேங்கி தொற்றுநோய் பரவ வழி வகுக்கிறது எனவே கழிவுநீரை உடனே அகற்றி தொட்டியை சரிசெய்ய வேண்டும்.

சிவா, மேல அனுப்பானடி

கால்வாயில் குப்பைகள்

மதுரை மாநகராட்சி மேட்டுத்தெரு பகுதியில் உள்ள என்.எஸ்.கே. வீதி ஒட்டிய பகுதியில் அமைந்துள்ள கால்வாயில் குப்பைகள் தேங்கியுள்ளது. இதனால் அதில் கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகி தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும் சுகாதார சீர்கேடு ஏற்படும் முன்னர் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து தேங்கிய குப்பைகளை அகற்றி கால்வாயை தூர்வார வேண்டும்.

அண்ணாதுரை, மதுரை

பள்ளிக்கு நுழைவுவாயில் தேவை

மதுரை மாவட்டம் மாவிலிபட்டியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது.இப்பள்ளியில் முறையான நுழைவுவாயில் கிடையாது.அதனால் விடுமுறை நாட்களில் பள்ளியில் உள்ள கதவுகள், ஜன்னல்கள், வளாகத்தில் உள்ள மரங்களுக்கு பாதுகாப்பு இல்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பள்ளிக்கு நுழைவுவாயில் அமைத்துதர வேண்டும்.

திவ்யாபாரதி, மாவிலிப்பட்டி

கட்டிட கழிவுகள் அகற்றப்படுமா?

மதுரை 65 -வது வார்டு தெற்கு வாசல் செட்டியூரணி 4- வது தெருவில் கட்டிட கழிவுகளை சிலர் கொட்டி வருகிறார்கள். காற்று அடித்தால் இந்த குப்பையானது புழுதியாக பறக்கிறது. இதனால் இப்பகுதியில் காற்று மாசுபாடு ஏற்பட்டு இப்பகுதி மக்களுக்கு சுவாச பிரச்சினை போன்றவை ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து இப்பகுதியில் கொட்டப்படும் கட்டிட கழிவுகளை உடனே அகற்ற வேண்டும்.

சங்கர், செட்டியூரணி

கழிவுநீரால் அவதி

மதுரை மாவட்டம் 24-வது வார்டு செல்லூர் ராணி மங்கம்மாள் தெருவில் உள்ள பாதாள சாக்கடையில் இருந்து கழிவு நீரானது கசிந்து வெளியேறி வருகிறது. இதனை கடந்து வரும் பொதுமக்கள் துர்நாற்றத்தால் அவதிப்படுகிறார்கள். மேலும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்றுநோய் பரவும் முன்னர் உரிய நடவடிக்கை எடுக்கப்படுமா?.

சந்துரு, செல்லூர்.

குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

மதுரை செல்லூர் கண்மாயில் ஆகாயத்தாமரைகள் அதிக அளவில் உள்ளது. இதனால் இப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு நிலவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த கண்மாயை தூர்வாரி ஆகாயத்தாமரைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சந்தனகுமார், செல்லூர்

சுகாதார சீர்கேடு

மதுரை மாவட்டம் பழைய மகாளிபட்டி செல்லும் சாலையில் சமுதாயக்கூடம் அருகில் குப்பையானது மலைபோல் குவிந்துள்ளது. தேங்கிய குப்பையால் இப்பகுதியின் சுகாதாரம் கெடுவதுடன் தொற்றுநோய் பரவும் அபாயம் நிலவுகிறது. மேலும் இப்பகுதியில் வீசும் துர்நாற்றத்தால் மக்கள் சிரமப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தேங்கி கிடக்கும் குப்பையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அப்பகுதி பொதுமக்கள்

நாய்கள் ெதால்லை

மதுரை கிழக்கு ஒத்தக்கடை அருகே கொடிக்குளம் அய்யப்பன் தெருவில் நாய்கள் அதிக அளவில் நடமாடுகின்றன. இதனால் தெருக்களில் நடமாட இப்பகுதி மக்கள், குழந்தைகள் அச்சப்படுகிறார்கள். மேலும் இரவுநேரங்களில் வாகனங்களில் செல்வோரை துரத்தி சென்று கடிக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதியில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும்.

சித்ரா அழகர், கொடிக்குளம்.

புழுதி பறக்கும் சாலை

மதுரை மாவட்டம் கூடல்நகர் பாலம்-அலங்காநல்லூர் சாலை சேதமடைந்து மண்ரோடாக காட்சியளிக்கிறது. மேலும் சாலையின் இருபுறங்களிலும் மண் தேங்கி கிடக்கிறது. இதனால் காற்றடித்தால் புழுதி கிளம்பி வாகனஓட்டிகளை விபத்தில் சிக்க வைக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கருப்பையா, பெத்தானியாபுரம்.


Related Tags :
Next Story