'தினத்தந்தி' புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

திண்டுக்கல்

'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற 'வாட்ஸ்-அப்' எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

குவிந்து கிடக்கும் குப்பை

திண்டுக்கல் ரவுண்டு ரோடு எழில்நகர் குடியிருப்பு பகுதியில் உள்ள தேவாலயம் அருகில் சாலையோரத்தில் குப்பை கழிவுகள் கொட்டப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதாரக்கேடும் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த வழியாக நடைபயிற்சி செய்பவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற வேண்டும்.

-ராமன், திண்டுக்கல்.

சாக்கடை கால்வாயை தூர்வார வேண்டும்

போடியை அடுத்த கொடுவிலார்பட்டி ஊராட்சி அரண்மனைபுதூர் நடுத்தெருவில் சாக்கடை கால்வாய் முறையாக தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் கால்வாயில் இருந்து கழிவுநீர் வெளியேறி தெருவில் தேங்கி நிற்பதால் துர்நாற்றம் வீசுவதுடன் நோய்த்தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே சாக்கடை கால்வாயை தூர்வார வேண்டும்.

-விஷ்ணுபிரியா, அரண்மனைபுதூர்.

புதர்மண்டி கிடக்கும் சாலை

பழனியை அடுத்த சிவகிரிப்பட்டி பாண்டியன்நகரில் சாலை பராமரிப்பு பணிகள் முறையாக மேற்கொள்ளப்படவில்லை. இதனால் சாலை சேதமடைந்ததுடன் செடி-கொடிகள் வளர்ந்து சாலையை ஆக்கிரமித்தது. இதனால் சாலை தற்போது புதர்மண்டி வாய்க்கால் வரப்பு போல் மாறியுள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஆலிஸ் கீர்த்தனா, சிவகிரிப்பட்டி.

கழிவுநீரால் சுகாதாரக்கேடு

கம்பம் அருகே சுருளிப்பட்டி நல்லுத்தேவர் தெருவில் சாக்கடை கால்வாயில் கழிவுநீர் வெளியேறாமல் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதாரக்கேடும் ஏற்பட்டுள்ளது. அதேநேரம் கொசுத்தொல்லையும் அதிகமாக உள்ளது. எனவே சாக்கடை கால்வாயை தூர்வார வேண்டும்.

-சிவாஜி, சின்னமனூர்.

பள்ளி வளாகத்தில் தேங்கும் மழைநீர்

ஆத்தூர் தாலுகா சித்தையன்கோட்டையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மழைக்காலத்தில் தண்ணீர் தேங்கி நிற்பவது வாடிக்கையாக உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு மழை பெய்த போது கூட பள்ளி வளாகத்தில் மழைநீர் தேங்கியது. இதனால் பள்ளிக்குள் செல்ல முடியாமல் மாணவ-மாணவிகள் தவித்தனர். எனவே பள்ளி வளாகத்தில் மழைநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பொதுமக்கள், சித்தையன்கோட்டை.

சாலை சீரமைக்கப்படுமா?

போடியை அடுத்த மேலசொக்கநாதபுரம் கிருஷ்ணாநகரில் தார்சாலை அமைக்கப்படவில்லை. மண் பாதையாக உள்ளது. இதனால் மழைக்காலங்களில் அப்பகுதி சாலை சகதி காடாக காட்சியளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே சாலையை சீரமைக்க வேண்டும்.

-தெருவாசிகள், கிருஷ்ணாநகர்.

அரசு பஸ்சை முறையாக இயக்க வேண்டும்

தேனியில் இருந்து ஆண்டிப்பட்டி தாலுகா மயிலாடும்பாறைக்கு இயக்கப்படும் அரசு பஸ் கடந்த சில நாட்களாக கடமலைக்குண்டு வரையே இயக்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள், மாணவ-மாணவிகள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். எனவே அரசு பஸ்சை முறையாக இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பாரதி, மயிலாடும்பாறை.

சாக்கடை கால்வாய் அமைக்கப்படுமா?

ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் புதுச்சத்திரம் பொம்மநல்லூர் பகுதியில் சாக்கடை கால்வாய் வசதி செய்யப்படவில்லை. இதனால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் தெருவில் தேங்குகிறது. இதன் காரணமாக அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன் நோய்த்தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே சாக்கடை கால்வாய் அமைக்க வேண்டும்.

-ரங்கசாமி, பொம்மநல்லூர்.

------------------

உங்கள் புகார்களை இணையதளம் மூலமாகவும் https://pukaarpetti.dailythanthi.com என்ற முகவரியில் பதிவு செய்யலாம்.


Next Story