புகார் பெட்டி


புகார் பெட்டி
x

புகார் பெட்டி

மதுரை

சேறும் சகதியுமான சாலை

மதுரை மாவட்டம் செல்லூர்- குலமங்கலம் இணைப்பு மண்சாலையில் குடிநீர் குழாய் பதிப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளம் ஆங்காங்கே காணப்படுகிறது. தற்போது பெய்த மழையின் காரணமாக சாலை சேறும் சகதியுமாக காட்சியளிக்கிறது. இதில் வாகனஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்து காயமடைகின்றனர். எனவே சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அபுபக்கர், செல்லூர்.

சுகாதார சீர்கேடு

மதுரை டவுன்ஹால் ரோடு 76-வது வார்டில் தற்போது பெய்த மழையின் காரணமாக மழைநீர் குளம்போல் தேங்கியுள்ளது. சாலையில் பயணிக்க முடியாமல் வாகனஓட்டிகள் கீழே விழுந்து காயமடைகின்றனர். மேலும் தேங்கிய தண்ணீரால் சுகாதார சீர்கேடுடன் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே மழைநீர் தேங்குவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சக்திவேல், மதுரை.

கரடு முரடான சாலை

மதுரை மேலஅனுப்பானடியில் இருந்து கெங்காநகர் செல்லும் பாதை கரடு முரடாக காட்சியளிக்கிறது. சாலை ஆங்காங்கே பள்ளம் போன்று சேதமடைந்து காணப்படுகிறது. சாலையில் மழைநீர் தேங்கி காணப்படுவதால் வாகனஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் பயணிக்கின்றனர். எனவே அதிகாரிகள் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மோகன், மேலஅனுப்பானடி.

சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகள்

மதுரை மாட்டுத்தாவணி புதூர் ஒத்தக்கடை திருமோகூர் கோவில் அருகே உள்ள சர்வேயர் காலனி சாலையில் கால்நடைகள் சுற்றித்திரிகின்றன. இதனால் வாகனஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகளை பிடித்து அப்புறப்படுத்தி அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பார்த்திபன், மதுரை.

பஸ்கள் பழுதுபார்க்கப்படுமா?

மதுரை நகர் மற்றும் புறநகர் பகுதியில் இயக்கப்படும் சில பஸ்கள் பழுதடைந்த நிலையிலும், மழை காலங்களில் மழைநீர் ஒழுகும் நிலையிலும், பழுதடைந்து நடுவழியில் நிற்கும் நிலையிலும் காணப்படுகிறது. இதனால் பஸ்சில் பயணிக்க முடியாமல் பயணிகள் அதிக அளவில் சிரமப்படுகின்றனர். எனவே மாநகராட்சி அதிகாரிகள் பஸ்களை சீரமைத்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மோகன், மதுரை.

கசிந்து வெளியேறும் கழிவுநீர்

மதுரை ஜீவாநகர் தென்றல் நகர் 78-வது வார்டு பகுதியில் பாதாள சாக்கடையின் மூடி வழியாக கழிவுநீர் கசிந்து அவ்வப்போது வெளியேறி வருகிறது. குடியிருப்பு பகுதியில் கழிவுநீர் தேங்கி வாகனஓட்டிகள், பாதசாரிகள் சாலையில் பயணிக்க முடியாமல் அவதியடைகின்றனர். தேங்கிய கழிவுநீரால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சாக்கடையில் ஏற்படும் கசிவை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அஷ்ரப், மதுரை.

சுகாதாரமற்ற சூழல்

மதுரை கோ.புதூர், அழகர்கோவில் சாலை விநாயகர் கோவில் தெருவில் உள்ள பாதாள சாக்கடையில் மோட்டார் மூலம் சிலர் கழிவுநீரை வெளியேற்றுகின்றனர். இதனால் பாதாள சாக்கடை நிரம்பி கழிவுநீர் வீட்டின் கழிவறையில் தேங்கி விடுகிறது. இதனால் சுகாதாரமற்ற சூழல் நிலவுகிறது. எனவே கழிவுநீர் விடுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தேவிகணேசன், அழகர்கோவில்.

வீடுகளில் தேங்கும் மழைநீர்

மதுரை மாநகராட்சி 19-வது வார்டு தானத்தவம் கிராமத்தில் மாடக்குளம் கண்மாய் உபரிநீர் மற்றும் மழைநீர் தாழ்வான பகுதியில் தேங்கி நிற்கிறது. இதனால் இப்பகுதி மக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே மழைநீர் தேங்குவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், மதுரை.

பயணிகள் நிழற்குடை தேவை

மதுரை செல்லூர்-குலமங்கலம் ரோட்டில் பயணிகள் நிழற்குடை வசதி இல்லை. இதனால் இங்கு வருவோர் குறிப்பாக முதியோர், கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே இப்பகுதியில் நிழற்குடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சந்தனகுமார், மதுரை.

தொற்றுநோய் பரவும் அபாயம்

மதுரை வில்லாபுரம் மீனாட்சி நகர் துளசிராம் மெயின்தெரு, சுபாஷ் சந்திரபோஸ் தெரு சந்திப்பில் மழைநீர் மற்றும் கழிவுநீர் தேங்கி உள்ளது. இந்த பகுதியில் பள்ளி செயல்படுவதால் மாணவர்கள் சாலையில் பயணிக்க முடியாமல் அவதியடைகின்றனர். மேலும் தேங்கிய கழிவுநீரால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சாலையில் மழைநீர் தேங்குவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விக்னேஷ், மதுரை.


Next Story