'தினத்தந்தி' புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

திண்டுக்கல்

'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற 'வாட்ஸ்-அப்' எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

தூர்வாரப்படாத சாக்கடை கால்வாய்

வடமதுரையை அடுத்த தும்மலக்குண்டு பகுதியில் சாக்கடை கால்வாய் தூர்வாரப்படாமல் உள்ளது. மேலும் குப்பைகளையும் சிலர் கொட்டி செல்கின்றனர். இதனால் கழிவுநீர் வெளியேறாமல் கால்வாயிலேயே தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதாரக்கேடும் ஏற்பட்டுள்ளது. எனவே சாக்கடை கால்வாயை தூர்வார வேண்டும்.

-அருண், தும்மலக்குண்டு.

கழிப்பறையை மறைக்கும் ஜல்லிக்கற்கள்

ஒட்டன்சத்திரம் பஸ் நிலைய வளாகத்தில் உள்ள கழிப்பறையை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத வகையில் அதன் முன்பு ஜல்லிக்கற்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளன. மேலும் கழிப்பறையும் பராமரிப்பு இன்றி சுகாதாரமற்ற நிலையில் உள்ளது. எனவே ஜல்லிக்கற்களை அகற்றுவதுடன் கழிப்பறையையும் சுத்தப்படுத்த வேண்டும்.

-ரங்கசாமி, கம்பளிநாயக்கன்பட்டி.

சேதமடைந்த சாலை

திண்டுக்கல்லை அடுத்த நொச்சிஓடைப்பட்டி பகுதியில் சாலை பராமரிப்பு இல்லாமல் சேதமடைந்து குண்டும், குழியுமாக மாறி உள்ளது. மழைக்காலங்களில் இந்த பள்ளங்களில் தண்ணீர் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. எனவே சாலையை சீரமைக்க வேண்டும்.

-அழகர், குரும்பபட்டி.

மின்கம்பம் மாற்றப்படுமா?

தேனியை அடுத்த உப்பார்பட்டி அரசு பள்ளி அருகில் உள்ள மின்கம்பம் சேதமடைந்து வருகிறது. கம்பத்தின் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து கட்டுமான கம்பிகள் வெளியே தெரிய தொடங்கியுள்ளன. இதே நிலை நீடித்தால் எந்த நேரத்திலும் மின்கம்பம் சாய்ந்து விழும் அபாயம் உள்ளது. எனவே மின்கம்பத்தை மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

-பொதுமக்கள், உப்பார்பட்டி.

குளம்போல் தேங்கிய கழிவுநீர்

போடி மேலச்சொக்கநாதபுரம் 3-வது வார்டு பகுதியில் சாக்கடை கால்வாய் தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் கழிவுநீர் வெளியேறி குடியிருப்பு பகுதியில் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் கொசுத்தொல்லை அதிகரித்துள்ளது. எனவே சாக்கடை கால்வாயை தூர்வாரி கழிவுநீர் தேங்காமல் இருக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-குடியிருப்புவாசிகள், மேலச்சொக்கநாதபுரம்.

குடிநீர் தட்டுப்பாடு

ஒட்டன்சத்திரம் அருகே தாசரிபட்டி ஸ்டாலின்நகரில் கடந்த சில நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் அப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் குடிநீர் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். எனவே முறையாக குடிநீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஆனந்த், தாசரிபட்டி.

சாலை சீரமைக்கப்படுமா?

தேனி புது பஸ் நிலையத்தில் இருந்து கே.ஆர்.ஆர்.நகர் செல்லும் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக மாறியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-திரவியம், தேனி.

போக்குவரத்துக்கு இடையூறு

திண்டுக்கல் மாநகராட்சி 22-வது வார்டு பகுதியில் சோலைஹால் ரோட்டில் உள்ள தரைப்பாலம் இடிக்கப்பட்டதுடன் கட்டிட கழிவுகள் சாலையோரத்தில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் கொட்டப்பட்டன. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். எனவே கட்டிட கழிவுகளை அகற்ற வேண்டும்.

-யாசர் அராபத், திண்டுக்கல்.

புதர்மண்டி கிடக்கும் பூங்கா

போடி மேலச்சொக்கநாதபுரம் 8-வது வார்டு அமராவதிநகரில் உள்ள பூங்கா முழுவதும் முட்செடிகள் வளர்ந்து புதர்மண்டி காட்சியளிக்கிறது. இதனால் பூங்காவில் நடைபயிற்சி செய்ய வருபவர்கள், விளையாடுவதற்காக வரும் சிறுவர்கள் என அனைத்து தரப்பினரும் அவதிப்படுகின்றனர். எனவே பூங்காவை சூழ்ந்த முட்செடிகளை வெட்டி அகற்ற வேண்டும்.

-கோபிநாத், மேலச்சொக்கநாதபுரம்.

இணைப்பு சாலை வேண்டும்

தேனி சிவாஜிநகரில் உள்ள பாலத்துக்கான இணைப்பு சாலை அமைக்கப்படாமல் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே இணைப்பு சாலையை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-வெற்றி, தேனி.

----------------

உங்கள் புகார்களை இணையதளம் மூலமாகவும் https://pukaarpetti.dailythanthi.com என்ற முகவரியில் பதிவு செய்யலாம்.

----------------


Next Story