புகார்பெட்டி
புகார்பெட்டி
கூடுதல் பஸ் இயக்கப்படுமா?
சிவகங்கை பஸ் நிலையத்தில் இருந்து மருத்துவக்கல்லூரி செல்வதற்கு குறைந்த அளவிலான பஸ்களே இயக்கப்படுகின்றன. இதனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் நோயாளிகளும் பொதுமக்களும் மிகவும் சிரம்ப்படுகின்றனர். எனவே கூடுதல் பஸ்களை இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சுப்புராம், சிவகங்கை.
நாய்கள் தொல்லை
சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூர் பகுதியில் ஏராளமான நாய்கள் சாலையில் சுற்றித்திரிகின்றன. இந்த நாய்கள் சாலையில் செல்பவர்களை துரத்துவதால் பொதுமக்கள் தங்கள் வீட்டை விட்டு வெளியே வர அச்சப்படுகின்றனர். மேலும் நாய்கள் துரத்துவதால் வாகனஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் நிலவுகிறது. எனவே பொதுமக்களை அச்சுறுத்தும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வேலாயுதம், திருக்கோஷ்டியூர்.
சேதமடைந்த சாலை
சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சாலைகள் பல இடங்களில் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் இவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கார்த்திகேயன், எஸ். புதூர்.
கொசு தொல்லை
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கழிவுநீர் தேங்கி நிற்பதால் கொசு தொல்லை அதிகரித்து காணப்படுகிறது.. இதனால் இரவில் தூங்க முடியாமல் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே கொசு மருந்து அடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், இளையான்குடி