புகார்பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
தெருவிளக்குகள் அமைக்க வேண்டும்
ராமநாதபுரம் மாவட்டம் திருப்பாலைக்குடி கிழக்கு கடற்கரை சாலையில் போலீஸ் நிலையத்தில் இருந்து பாண்டிகோவில் சந்திப்பு வரை தெரு விளக்குகள் இல்லை. இதனால் இரவில் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவ்வழியே செல்ல மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே தெரு விளக்குகள் அமைத்து தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அகமதுகான், திருப்பாலைக்குடி.
நடவடிக்கை தேவை
ராமநாதபுரம் மாவட்டம் புதுமடம் வடக்கு தெரு அருகில் புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டது. ஆனால் இப்பகுதியில் உள்ள மாவடி மதீனா நகரில் உள்ள வீட்டு இணைப்புகள் புதிய மின்மாற்றியில் இணைக்கப்படாமல் உள்ளது. இப்பகுதியில் உள்ள மின் இணைப்புகளை புதிய மின்மாற்றியில் இணைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சலீம், புதுமடம்.
கொசுக்கள் தொல்லை
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கொசுத்தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் பொதுமக்கள் இரவு நேரங்களில் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அமீர், தொண்டி.
போக்குவரத்து நெரிசல்
ராமநாதபுரம் நகர் பகுதிகளில் காலை மற்றும் மாலை நேரங்களில் அதிக அளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்வோர் குறித்த நேரத்திற்குள் செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
குமரேசன், ராமநாதபுரம்.
விபத்து அபாயம்
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து காணப்படுகிறது. நாய்கள் பொதுமக்களை அச்சுறுத்துவதுடன் வாகனங்களின் குறுக்கே பாய்ந்து விபத்துக்களையும் ஏற்படுத்துகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அப்துல், கீழக்கரை.