புகார் பெட்டி
புகார் பெட்டி
புதிய சாலை அமைக்கப்படுமா?
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே வெள்ளானைக்கோட்டை ஆறுமுகம் தெருவில் இருந்து இந்திரா காலனி செல்லும் சாலை போக்குவரத்துக்கு லாயக்கற்று குண்டும் குழியுமாக உள்ளது. எனவே அங்கு புதிய சாலை அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்வார்களா?.
- முருகன், வெள்ளானைக்கோட்டை.
சுகாதாரக்கேடு
தென்காசி யூனியன் கணக்கப்பிள்ளைவலசை பஸ் நிறுத்தம் அருகில் உள்ள தெருவில் சாக்கடை கழிவுநீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் சுகாதாரக்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே அங்கு வாறுகால் அமைத்து கழிவுநீரை முறையாக வெளியேற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.
- அன்னகணேஷ், கணக்கப்பிள்ளைவலசை.
சேதமடைந்த சாலை
கடையநல்லூர் தாலுகா அரியநாயகிபுரம் பூக்கடையில் இருந்து பெரியசாமிபுரம் செல்லும் சாலையில் சங்கனாப்பேரி செல்லும் ரோடு சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே அங்கு புதிய சாலை அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.
-மதுசூதனன், அரியநாயகிபுரம்.
பஸ் வசதி அவசியம்
மேல ஆம்பூரில் இருந்து கருத்தப்பிள்ளையூர், சிவசைலம், கல்யாணிமடம், கோவிந்தபேரி, கடையம் வழியாக தென்காசிக்கு போதிய பஸ் வசதி இல்லை. இதனால் கிராமப்புற மக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே மேற்கண்ட வழித்தடத்தில் கூடுதலாக அரசு டவுன் பஸ்கள் இயக்குவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்வார்களா?.
-கிறிஸ்டோபர், கருத்தப்பிள்ளையூர்.
வீட்டின் மீது சாய்ந்த கம்பம்
கடையம் யூனியன் தெற்கு கடையம் பஞ்சாயத்து தெருவில் உள்ள தொலைத்தொடர்பு இரும்பு கம்பமானது அங்குள்ள வீட்டின் மீது சாய்ந்த நிலையில் உள்ளது. எனவே இதனை சரி செய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.
-திருக்குமரன், கடையம்.