புகார்பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
தேங்கி நிற்கும் கழிவுநீர்
ராமநாதபுரம் நகர் பகுதிகளில் உள்ள சாக்கடையில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்றுநோய் பரவும் அபாயம் நிலவுகிறது. எனவே கழிவுநீர் தேங்குவதை தடுக்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பெருமாள், ராமநாதபுரம்.
போக்குவரத்து இடையூறு
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பஸ் நிலையம் பகுதியில் சிலர் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக இருசக்கர வாகனங்களை சாலையில் ஆங்காங்கே நிறுத்தி செல்கின்றனர். இதனால் சாலையில் பயணிக்கும் வாகனஓட்டிகளுக்கும், பொதுமக்களுக்கும் சிரமம் ஏற்படுகிறது. எனவே வாகனங்களை சாலையில் நிறுத்தப்படுவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ரஞ்சித், முதுகுளத்தூர்.
மாணவிகள் சிரமம்
ராமநாதபுரம் மாவட்டம் திருப்பாலைக்குடியில் ஏராளமான பள்ளி மாணவிகள் அருகில் உள்ள பகுதிகளுக்கு சென்று உயர்கல்வி பயின்று வருகின்றனர். எனவே இந்த மாணவிகளின் சிரமத்தை கருத்தில் கொண்டு திருப்பாலைக்குடி பகுதியில் பெண்கள் மேல்நிலைப்பள்ளி அமைத்துதர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அகமதுகான், திருப்பாலைக்குடி.
சாலையில் கொட்டப்படும் குப்பை
ராமநாதபுரம் நகர் பகுதியில் சிலர் சாலையில் குப்பைகளை கொட்டி செல்கின்றனர். இதனால் காற்றுவீசும் சமயங்களில் குப்பைகள் வாகனஓட்டிகள் மீது விழுந்து அவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்துகிறது. மேலும் அவர்கள் விபத்தில் சிக்கும் அபாயமும் உள்ளது. எனவே சாலையோரங்களில் குப்பைகள் கொட்டப்படுவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
பொன்னுச்சாமி, ராமநாதபுரம்.
கருவேல மரங்கள் ஆக்கிரமிப்பு
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள சில கண்மாய்களில் கருவேல மரங்களின் ஆக்கிரமிப்பு அதிகரித்து காணப்படுகிறது. இதனால் கண்மாயில் நீர்வளம் பாதிக்கப்படுவதுடன், விவசாயம் போன்ற தொழில்வளங்களுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் நிலை உள்ளது. கண்மாயில் வளர்ந்துள்ள கருவேல மரங்களை அகற்ற அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ெஜகன், ராமநாதபுரம்.