புகார் பெட்டி


புகார் பெட்டி
x
தினத்தந்தி 1 Feb 2023 6:45 PM GMT (Updated: 1 Feb 2023 6:46 PM GMT)

புகார் பெட்டி

தென்காசி

சாலையில் ராட்சத பள்ளம்

செங்கோட்டை- கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் கட்டளைகுடியிருப்பு பஸ் நிறுத்தம் அருகில் சாலையில் ராட்சத பள்ளம் உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றன. மேலும் போக்குவரத்து நெருக்கடியும் ஏற்படுகிறது. எனவே சாலையை சீரமைப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

-ராஜீவ்காந்தி, செங்கோட்டை.

கடையம் அருகே திருமலையப்பபுரத்தில இருந்து பொட்டல்புதூர் செல்லும் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை சீரமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

-திருக்குமரன், கடையம்.

கழிப்பறையை சூழ்ந்த குப்பைகள்

கடையநல்லூர் தாலுகா திரிகூடபுரத்தில் உள்ள பொது கழிப்பறை அருகில் பெரும்பாலானவர்கள் குப்பைகளை கொட்டுவதால் குப்பைக்கிடங்காக காட்சி அளிக்கிறது. மேலும் பொது கழிப்பறையை பயன்படுத்த முடியாத அளவுக்கு குப்பைகள் குவிந்ததால் பொதுமக்கள் திறந்தவெளியில் மலம் கழிக்கும் அவலநிலை உள்ளது. எனவே பொது கழிப்பறை அருகில் குவிந்த குப்பைகளை அகற்றி, கழிப்பறையை தூய்மையாக பராமரிப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

-ஹரிகரன், திரிகூடபுரம்.

சாலையோரம் கொட்டப்படும் மருத்துவ கழிவுகள்

ஆலங்குளத்தில் இருந்து புதுப்பட்டி செல்லும் சாலையோரம் மர்மநபர்கள் மருத்துவ கழிவுகளை கொட்டி செல்கின்றனர். இதனால் சுகாதாரக்கேடு ஏற்படுவதுடன் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே மருத்துவ கழிவுகளை அகற்றுவதுடன், அதனை திறந்த வெளியில் கொட்டியவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.

-ஆறுமுகராஜ், ஆலங்குளம்.

இலவச கழிப்பறை பயன்பாட்டுக்கு வருமா?

புளியங்குடி நகராட்சி சிந்தாமணி பஸ் நிலைய இலவச கழிப்பறையை சுற்றி செடி கொடிகள், முட்புதர்கள் வளர்ந்து பயணிகள் உபயோகப்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இதனால் பயணிகள் கழிப்பறையை பயன்படுத்த முடியாமல் திறந்தவெளியில் இயற்கை உபாதையை கழிக்கும் அவலநிலை உள்ளது. இதனால் சுகாதாரக்கேடு ஏற்படுவதுடன் பல்வேறு நோய்கள் பரவ காரணமாகின்றது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இலவச கழிப்பறையை முறையாக பராமரித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுப்பார்களா?.

-மகேஷ், சிந்தாமணி.



Next Story