புகார்பெட்டி


புகார்பெட்டி
x
தினத்தந்தி 15 Feb 2023 6:45 PM GMT (Updated: 15 Feb 2023 6:45 PM GMT)

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

ராமநாதபுரம்

விபத்து அபாயம்

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் பேரூராட்சி பகுதிகளில் சிலர் வாகனங்களை சாலைகளில் ஆங்காங்கே நிறுத்தி செல்கின்றனர். இதனால் பொதுமக்கள் நடக்க சிரமப்படுவதுடன், போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படுமா?

ரவி, ஆர்.எஸ்.மங்கலம்.

போக்குவரத்து நெரிசல்

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகர் பகுதியில் பகலில் கனரக வாகனங்கள் அதிகம் வருவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் மாணவர்களும் வேலைக்கு செல்பவர்களும் மிகவும் சிரமப்படுகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அன்வர், கீழக்கரை.

குண்டும், குழியுமான சாலை

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சாலைகள் ஆங்காங்கே சேதமடைந்து காணப்படுகிறது. இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அடிக்கடி விபத்துகளும் நடக்கிறது. வாகன ஓட்டிகளின் நலன்கருதி குண்டும், குழியுமான சாலை சீரமைக்கப்படுமா?

வெற்றி, முதுகுளத்தூர்.

நடவடிக்கை தேவை

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் நகர் பகுதியில் சில பகுதிகளில் கழிவுநீரானது விவசாய நிலத்திற்குள் விடப்படுகிறது. இதன் காரணமாக பல ஏக்கர் விவசாய நிலங்கள் சேதம் அடைகின்றன. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், முதுகுளத்தூர்.

போக்குவரத்து இடையூறு

ராமநாதபுரம் நகரில் பல பகுதிகளில் பிரதான சாலைகளிலும் உட்புற ரோடுகளின் இருபுறமும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு பொதுமக்களின் நடமாட்டத்துக்கும், வாகன போக்குவரத்துக்கும் இடையூறாக உள்ளது. எனவே ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அஸ்மாபாக் அன்வர்தீன், ராமநாதபுரம்.


Next Story