புகார்பெட்டி


புகார்பெட்டி
x
தினத்தந்தி 8 March 2023 6:45 PM GMT (Updated: 8 March 2023 6:45 PM GMT)

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

ராமநாதபுரம்

பொதுமக்கள் சிரமம்

ராமநாதபுரம் மாவட்டம் பெருநாழி பகுதியில் இருந்து பரமக்குடி, ராமநாதபுரம் பகுதிகளுக்கு செல்ல போதிய பஸ் வசதி இல்லை. இதனால் அப்பகுதி மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே பஸ் வசதி ஏற்படுத்தி தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முனியசாமி, பரமக்குடி.

தொல்லை தரும் தெருநாய்கள்

ராமநாதபுரம் பழைய பஸ் நிலைய பகுதிகளில் நாய்கள் கூட்டமாக திரிகின்றன. இதனால் பயணிகள். மாணவர்கள் அச்சப்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ரமேஷ், ராமநாதபுரம்.

மாசடையும் ஊருணி

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி வட்டம் சேரந்தை கிராமத்தில் உள்ள ஊருணியில் நீர் கால்நடைகளால் மாசடைந்து வருகிறது. இதனால் அப்பகுதி மக்கள் ஊருணி நீரை உபயோகப்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே ஊருணியை சுற்றி வேலி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சண்முகவேல், கடலாடி.

நடவடிக்கை தேவை

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ். மங்கலம் பகுதியில் சிலர் குப்பைகளை பொது இடங்களில் கொட்டுகின்றனர். இதனால் நடந்து செல்லும் மக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே இதனை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

குணா, ஆர்.எஸ்.மங்கலம்.

தீர்வு கிடைக்குமா?

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் கோவில் செல்லும் சாலையில் வாகனங்களின் ஆக்கிரமிப்பு அதிகரித்து உள்ளது. இதனால் வாகனங்கள் பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் இங்கிருந்து இயக்கப்படும் பயணிகள் வாகனங்களில் சிலர் எதிர்பார்த்ததை விட அதிக கட்டணம் வசூலிக்கின்றனர். இதனால் சாமானியர்கள் தங்கள் பயணங்களை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே இதற்கு தீர்வு காண சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுப்பார்களா?

மாரிமுத்து, ராமேசுவரம்.


Next Story