புகார்பெட்டி


புகார்பெட்டி
x
தினத்தந்தி 19 March 2023 6:45 PM GMT (Updated: 19 March 2023 6:45 PM GMT)

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

ராமநாதபுரம்

முழுமையடையாத கால்வாய் பணி

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா திருப்பாலைக்குடி பஸ் நிலையம் முதல் கடற்கரை வரை உள்ள பிரதான சாலையில் கழிவுநீர் கால்வாய் பணி ஆக்கிரமிப்பால் பாதியில் நிற்பதால் இப்பகுதியில் கழிவுநீர் தேங்குகிறது. தேங்கி நிற்கும் கழிவுநீரில் இருந்து டெங்கு போன்ற நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. எனவே இந்த பகுதியில் கழிவுநீர் கால்வாயை முழுமையாக அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சுல்தான் செய்யது, திருப்பாலைக்குடி.

நடவடிக்கை தேவை

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தாலுகா திருப்புல்லாணி ஒன்றித்திற்கு உட்பட்ட வண்ணாங்குண்டு கிராமத்தில் ஏற்கனவே ஒரு மதுக்கடை இயங்கி வரும் நிலையில் பெரியப்பட்டினத்தில் உள்ள மதுக்கடையை அகற்றி வண்ணாங்குண்டு தரவை குடியிருப்பு பகுதியில் கட்டப்படுகிறது. ஒரே பஞ்சாயத்தில் 2 மதுக்கடை வைப்பதால் அப்பகுதியில் உள்ள மக்களுக்கு அச்சம் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்தில் கொண்டு இந்த மதுக்கடையை வேறு பகுதியில் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அர்சாத் அலி, வண்ணாங்குண்டு.

சுகாதார சீர்கேடு

ராமநாதபுரம் போகலூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட சத்திரக்குடி பஸ் நிறுத்தத்திற்கு பின்புறம் குப்பைகளை கொட்டுகின்றனர். மேலும் திறந்த கழிவறையாகவும் பயன்படுத்துகின்றனர். இதனால் இந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே இந்த பகுதியில் குப்பைகள் கொட்டுவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ெஜயராஜ், சத்திரக்குடி.

சாலை வசதி வேண்டும்

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியம் பட்டணம்காத்தான் பஞ்சாயத்து தென்வடல் தெருவில் சாலை வசதி இல்ைல. இதன் காரணமாக அவ்வழியாக வாகனங்களில் செல்பவர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே, இப்பகுதியில் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

ஹரிஸ், பட்டணம்காத்தான்.

சேதமடைந்த கழிவுநீர் கால்வாய்

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பள்ளிவாசல் மற்றும் நர்சரி பள்ளி அருகே உள்ள கழிவுநீர் கால்வாய் பல மாதங்களாக இடிந்த நிலையில் உள்ளது. இதனால் கழிவுநீர் தேங்கி நின்று துர்நாற்றம் வீசுகிறது. பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சேதமடைந்த கழிவுநீர் கால்வாயை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பைசல், முதுகுளத்தூர்.


Next Story