தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்


தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
x
தினத்தந்தி 1 May 2023 12:15 AM IST (Updated: 1 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

சிவகங்கை

மடைகள் சீரமைக்கப்படுமா?

சிவகங்கை மாவட்டம் நடராசபும் ஊராட்சி பிலாமிச்சம்பட்டியில் உள்ள பிலாமிச்சம் கண்மாயில் உள்ள மடைகள் போதிய பராமரிப்பின்றி உள்ளது. இதனால் விவசாயிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இந்த கண்மாயில் உள்ள மடைகளை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ரவீந்திரன், காரைக்குடி.

சாக்கடைகால்வாய் வசதி வேண்டும்

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உள்ள கண்ணமங்கலம் கிராமத்தில் உள்ள தெருவில் கழிவுநீர் செல்ல முறையான சாக்கடை கால்வாய் வசதி இல்லை. இதனால் கழிவுநீர் சாலையில் தேங்கி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துவதுடன், கொசுக்கள் உற்பத்தியாகி தொற்றுநோய் பரவும் அபாயம் நிலவுகிறது. எனவே இப்பகுதயில் சாக்கடை கால்வாய் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாஸ்கர், இளையான்குடி.

கருவேல மரங்கள் ஆக்கிரமிப்பு

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அரசின்பட்டி பகுதியில் சாலையோரம் கருவேல மரங்களின் ஆக்கிரமிப்புகள் அதிக அளவில் காணப்படுகிறது. இதனால் வாகனங்களில் செல்பவர்களுக்கு கருவேல மரங்கள் இடையூறு விளைவிப்பதுடன் சிறு, சிறு காயங்களையும் ஏற்படுத்துகிறது. எனவே சாலையோரம் உள்ள கருவேல மரங்களின் ஆக்கிரமிப்புகளை அகற்ற சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுப்பார்களா?

அழகேசன், சிங்கம்புணரி.

கரடு, முரடான சாலை

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் பகுதியில் இருந்து மேலூர் வரும் மெயின்ரோடு, ரணசிங்கபுரம், கோட்டையிருப்பு, கருப்பூர், எஸ்.எஸ்.கோட்டை வரை உள்ள சாலைகள் சேதமடைந்து கரடு முரடாக காணப்படுகிறது. இதனால் சாலையில் பயணிக்கும் வாகனஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்து காயமடைகின்றனர். எனவே சாலையை சீரமைத்திட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சுந்தர்ராஜ், திருப்பத்தூர்.

சாலையில் சுற்றும் கால்நடைகள்

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி சாலைகளில் கால்நடைகள் அதிகம் சுற்றித்திரிகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயமும் உள்ளது. மேலும் வாகனங்கள் மோதி கால்நடைகளும் இறக்கும் சம்பவமும் நடக்கிறது. எனவே இதுகுறித்து சம்பந்நப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பாார்களா?

ஹரி, திருப்புவனம்

1 More update

Next Story