தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்


தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
x
தினத்தந்தி 4 May 2023 12:15 AM IST (Updated: 4 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

சிவகங்கை

குப்பைகள் அகற்றப்படுமா?

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வைகைவடகரை விலக்கில் ஆற்றுப்பாலத்தின் அருகே குப்பைகள் மற்றும் இறைச்சி கழிவுகளை சிலர் கொட்டுகின்றனர். இதனால் அவ்வழியே செல்லும் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே குப்பைகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குமார், வைகை வடகரை.

குறைந்த மின்னழுத்தம்

சிவகங்கை மாவட்டம் உறுதிகோட்டை ஊராட்சி திட்டுக்கோட்டை பகுதியில் குறைந்த மின்னழுத்த பிரச்சினையால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளரிகி வருகின்றனர். இதனால் வீட்டில் உள்ள மின் சாதன பொருட்கள் பழுதாகின்றன. எனவே இப்பகுதியில் சீரான மின்வினியோகம் பெற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

பொதுமக்கள், திட்டுக்கோட்டை.

டாஸ்மாக் கடை இடமாற்றம் செய்யப்படுமா?

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி க.அள.ராம.தெருவில் உள்ள டாஸ்மாக் கடையினால் அப்பகுதியில் உள்ள மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். சிலர் மதுபாட்டில்களை உடைத்துவிட்டும் செல்கின்றனர். மேலும் குழந்தைகளை வெளியில் அனுப்ப முடியாத சூழலும் உள்ளது. எனவே இந்த டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு இடம் மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்கள், காரைக்குடி.

சேதமடைந்த சாலை

சிவகங்கை மாவட்டம் கண்டரமாணிக்கம் பொன்னாங்குடி விலக்கிலிருந்து கல்லல் புரண்டி சாலையானது பயன்படுத்த முடியாத அளவிற்கு சேதமடைந்து காணப்படுகிறது. எனவே இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? ஆறுமுகம் சேதுராமன், தென்மாபட்டு.

விபத்து அபாயம்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கடைத்தெருக்கள் மற்றும் சந்தை பகுதிகளில் சிலர் சாலைகளில் வாகனங்களை நிறுத்தி செல்கின்றனர். இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்படுவதுடன் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே இதுகுறித்து அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சிவா, காரைக்குடி


Next Story