புகார் பெட்டி


புகார் பெட்டி
x

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

தென்காசி

புகாருக்கு உடனடி தீர்வு

தென்காசி மாவட்டம் கடையம் பாரதிநகரில் இருந்து மாட்டுசந்தை வரையிலும் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக இருப்பதாக திருக்குமரன் என்பவர் அனுப்பிய பதிவு 'தினத்தந்தி' புகார் பெட்டியில் வெளியானது. இதையடுத்து சேதமடைந்த சாலை சீரமைக்கப்பட்டது. கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த 'தினத்தந்தி'க்கும், நடவடிக்கை மேற்கொண்ட அதிகாரிகளுக்கும் அவர் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளார்.

குப்பைத்தொட்டியான கிணறு

சங்கரன்கோவில் தாலுகா வீரிருப்பு கிராமத்தின் நடுவில் உள்ள ஊர் பொதுக்கிணற்றில் சிலர் குப்பைகளை கொட்டி வருகின்றனர். இதனால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. மேலும் அதன் அருகில் உள்ள தெருக்குழாயில் ஏராளமானவர்கள் குடிநீர் பிடித்து செல்கின்றனர். எனவே பொதுக்கிணற்றை தூர்வாரி மீண்டும் மக்கள் பயன்பாட்டுக்கு வழங்குவதுடன், அதன் மீது இரும்பு கம்பியாலான மூடி அமைப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

-செல்லத்துரை, வீரிருப்பு.

தெருவில் தேங்கும் கழிவுநீர்

கீழப்பாவூர் பேரூராட்சி 18-வது வார்டு சிவகாமிபுரம் மேல தெருவில் சாலை, வாறுகால், தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படவில்லை. மேலும் அங்கு தெருவில் கழிவுநீர் தேங்குவதால் சுகாதாரக்கேடு ஏற்படுவதுடன் விஷ பூச்சிகளின் நடமாட்டமும் உள்ளது. எனவே இதனை சரி செய்வதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

-செல்வம், சிவகாமிபுரம்.

சிமெண்டு சாலை அமைக்கப்படுமா?

வீரகேரளம்புதூர் தாலூகா கீழக்கலங்கல் பள்ளிவாசல் வடபுற தெரு, நடுத்தெரு, 3-வது வார்டு தெரு உள்ளிட்ட பகுதிகளில் சாலை அமைக்கப்படவில்லை. இதனால் தெருவில் மழைநீர், கழிவுநீர் தேங்கி சேறும் சகதியுமாக உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே அங்கு சிமெண்டு சாலை அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்வார்களா?

-தட்சிணாமூர்த்தி, கீழக்கலங்கல்.

குண்டும் குழியுமான சாலை

கடையம் அருகே மாதாபுரத்தில் இருந்து திருமலையப்பபுரம் வரையிலும் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. தற்போது பெய்த மழையில் சாலையில் மழைநீர் தேங்கி சேறும் சகதியுமாக உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். மேலும் அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகின்றன. எனவே சேதமடைந்த சாலையை சீரமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

-கண்ணன், கேளையாபிள்ளையூர்.


Next Story