தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
குப்பைகள் கொட்டுவது தடுக்கப்படுமா?
ராமநாதபுரம் அரண்மனை அருகே உள்ள தலைமை தபால் நிலையம் பின்புறம் சிலர் குப்பைகளை கொட்டுகின்றனர். மேலும் பிளாஸ்டிக் குப்பைகளையும் காய்கறி கழிவுகளையும் கொட்டுகின்றனர். இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு நிலவுகிறது. எனவே இப்பகுதியில் குப்பைகள் கொட்டப்படுவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மனோகரன், ராமநாதபுரம்.
குண்டும் குழியுமான சாலை
ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் ஒன்றியம் திருப்பாலைக்குடி பகுதியில் பலன்கோட்டை தெருவில் உள்ள சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் சாலையில் பயணிக்க முடியாமல் வாகனஓட்டிகள் சிரமப்படுகின்றனர். எனவே சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அருண், திருப்பாலைக்குடி.
கருவேலமரங்களின் ஆக்கிரமிப்பு
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பகுதியில் கருவேலமரங்களின் ஆக்கிரமிப்பு அதிக அளவில் உள்ளது. கிராமப்புற பகுதியில் சில இடங்களில் சாலையில் வாகனஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் கருவேலமரங்கள் ஆக்கிரமித்துள்ளது. எனவே இதற்கு தீர்வுகாண நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முருகன், பரமக்குடி.
நாய்கள் தொல்லை
ராமநாதபுரம் நகர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் சமீபகாலமாக நாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. நாய்கள் துரத்துவதால் சிலர் தங்கள் வீட்டை விட்டு வெளியே வர அச்சப்படுகின்றனர். மேலும் தெருநாய்களால் அவ்வப்போது விபத்துகளும் ஏற்படுகிறது. எனவே நாய்களை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாலா, ராமநாதபுரம்.
போக்குவரத்து நெரிசல்
ராமநாதபுரம் நகர் பகுதியில் காலை, மாலை வேளைகளில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் சாலையில் பயணிக்க முடியாமல் வாகனஓட்டிகள் சிரமப்படுகின்றனர். எனவே இப்பகுதியில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கணேசன், ராமசாதபுரம்.
வாகனஓட்டிகள் சிரமம்
சிவகங்கை மாவட்டம் கொளுஞ்சிபட்டியில் இருந்து காட்டாம்பூர் செல்லும் சாலை சேதம் அடைந்து காணப்படுகிறது.இதனால் அவ்வழியே செல்லும் வாகனஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைக்க வேண்டும்.
சுரேந்தர், திருப்பத்தூர்.
பஸ் இயக்கப்படுமா?
சிவகங்கை மாவட்டம் கீழடி மாநிலத்தின் தொன்மையை உலகிற்கு பறைசாற்றும் முக்கிய பகுதியாக திகழ்ந்து வருகிறது. இதனால் இப்பகுதிக்கு வரும் பொதுமக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. எனவே மாநிலத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் கீழடிக்கு பஸ்களை இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மணிகண்டன், சிவகங்கை.
குறைந்த மின்னழுத்தம்
சிவகங்கை மாவட்டம் பெருமச்சேரி கணபதி நகர் பகுதியில் குறைந்த மின்னழுத்தம் ஏற்படுவதால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். மேலும் மின்சாதன பொருட்களும் அடிக்கடி பழுதாகின்றன. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குமரன், இளையான்குடி.
வாகனஓட்டிகள் அவதி
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நகரில் தினமும் அதிக வாகனங்கள் சென்று வருகின்றன. இப்பகுதியில் சில வாகனஓட்டிகள் அதிக வேகத்துடன் வாகனங்களை இயக்குகின்றனர். இதனால் மற்ற வாகனஓட்டிகள் சாலையில் பீதியுடன் பயணிக்கின்றனர். எனவே வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மணிராஜ், காரைக்குடி.
சேதமடைந்த சாலை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை கிராமப்புற பகுதிகளில் சில இடங்களில் உள்ள சாலை சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் வாகனஓட்டிகள் சாலையில் பயணிக்க முடியாமல் சிரமப்படுகின்றனர். எனவே சேதமடைந்த சாலைகளை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ரமேஷ், மானாமதுரை.