புகார்பெட்டி


புகார்பெட்டி
x
தினத்தந்தி 24 May 2023 6:45 PM GMT (Updated: 24 May 2023 6:45 PM GMT)

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

ராமநாதபுரம்

வாகன ஓட்டிகள் அவதி

ராமநாதபுரத்தில் இருந்து ராமேசுவரம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையும் கீழக்கரை, தூத்துக்குடி செல்லும் இ.சி.ஆர். ரோடு சந்திக்கும் இடத்தின் அருகில் உள்ள ரெயில்வே மேம்பாலம் பகுதியில் தெருவிளக்குகள் எரியவில்லை. இதனால் பொதுமக்களும், வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அஸ்மாபாக் அன்வர்தீன், ராமநாதபுரம்.

சுகாதார சீர்கேடு

ராமநாதபுரம் நகரில் சில பகுதிகளில் ஆங்காங்கே குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. இதனால் துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதார சீர்கேடாகவும் உள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும் அவர்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படுமா?

பொதுமக்கள், ராமநாதபுரம்.

சேதமடைந்த சாலை

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியம் நாடார் வலசையிலிருந்து அழகன் குளத்திற்கு செல்லும் தார்சாலை மிகவும் சேதமடைந்து உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள், வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே, இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், நாடார்வலசை.

பொதுமக்கள் அவதி

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி பேரூராட்சிக்குட்பட்ட 14-வது வார்டு பகுதியில் தெரு விளக்குகள் எரியவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் இரவு நேரங்களில் வெளியே செல்ல மிகவும் அவதிப்படுகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

திருநாவுக்கரசு, தொண்டி.

கூடுதல் பஸ்கள் இயக்கப்படுமா?

ராமநாதபுரம் மாவட்டம் அரியான்கோட்டை ஊராட்சி மேலேந்தல் கிராமம் பகுதியில் இருந்து ஆர்.எஸ்.மங்கலம் போன்ற பகுதிகளுக்கு செல்ல குறைந்த அளவிலான பஸ்களே இயக்கப்படுகின்றன. இதனால் அப்பகுதி பொதுமக்கள், கர்ப்பிணிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே கூடுதல் பஸ்கள் இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


Next Story