தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
சேதமடைந்த மின்கம்பம்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா அம்மாஏந்தால் கிராம பகுதியில் தோட்டத்தில் உள்ள மின்கம்பம் மிகவும் சேதமடைந்து உள்ளது. விபரீதம் எதுவும் நிகழ்வதற்குள் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், திருப்பத்தூர்.
நோய் பரவும் அபாயம்
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகரில் பகல் மற்றும் இரவு நேரங்களில் கொசுக்கடியால் பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். மேலும் கொசுக்களின் மூலம் டெங்கு போன்ற நோய் தொற்றுக்களும் பரவ வாய்ப்பு உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அஜீஸ்கான், தேவகோட்டை.
விபத்து அபாயம்
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கால்நடைகள் சாலைகளில் அதிகம் சுற்றித்திரிகின்றன. இவைகள் சாலையின் குறுக்கே செல்வதால் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்து காயம் அடைகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
முகேஷ், திருப்புவனம்.
கூடுதல் பஸ்கள் இயக்கப்படுமா?
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் இருந்து மதுரை பெரியார் பஸ் நிலையத்திற்கு குறைந்த அளவிலான பஸ்களே இயக்கப்படுகின்றன. இதனால் பயணிகள் நீண்ட நேரம் காத்திருந்து பயணிக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே கூடுதல் பஸ்கள் இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முத்துகுமார், திருப்புவனம்.
குரங்குகள் தொல்லை
சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் குரங்குகளின் தொல்லை அதிகரித்து வருகிறது. இந்த குரங்குகள் பொதுமக்களை மிகவும் அச்சுறுத்தி வருகிறது. எனவே வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து குரங்குகள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும்.
அருண்குமார், சிங்கம்புணரி