தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
அடிக்கடி ஏற்படும் மின்தடை
சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் ஒன்றியத்தில் உள்ள புழுதிபட்டி, செட்டிகுறிச்சி கிராம பகுதிகளில் கடந்த சில நாட்களாக பகல் மற்றும் இரவு நேரங்களில் அடிக்கடி மின்தடை ஏற்படுகின்றது. இதனால் குழந்தைகள், முதியோர் அதிக சிரமத்துக்குள்ளாகியுள்ளனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், எஸ்.புதூர்.
விபத்து அபாயம்
சிவகங்கை மஜித்ரோடு 6-வது குறுக்கு தெரு சந்திப்பு பகுதியில் விபத்தை ஏற்படுத்தும் வகையில் ஆபத்தான பள்ளம் உள்ளது. இதனால் அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.
பொதுமக்கள், சிவகங்கை.
சாலையில் நிறுத்தப்படும் வாகனங்கள்
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் கீழரதவீதி மார்க்கெட் நுழைவு வாசல் பகுதியில் சிலர் போக்குவரத்திற்கு இடையூறாக வாகனங்களை ஆங்காங்கே நிறுத்தி செல்கின்றனர். இதனால் சாலையில் பயணிக்க முடியாமல் பொதுமக்கள் அவதியடையும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து உரிய நடவடிக்ைக எடுக்கப்படுமா?
பிரஜித், திருப்புவனம்.
நடவடிக்கை எடுக்கப்படுமா?
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் பகுதியில் உள்ள கண்மாய்களில் அதிக அளவில் கருவேல மரங்கள் வளர்ந்துள்ளன. மேலும் கண்மாய்களில் உள்ள மடைகளும் சேதமடைந்து காணப்படுகின்றன. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.
வெற்றி, காளையோர்கோவில்.
கூடுதல் பஸ்கள் வேண்டும்
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் இருந்து சுற்றுவட்டார பகுதி கிராமங்களுக்கு செல்ல போதிய அளவு பஸ்கள் இல்லை. இதன் காரணமாக பெண்கள் மற்றும் முதியோர்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே கூடுதல் நகர் பஸ்களை இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
முத்துராஜ், காரைக்குடி.