புகார் பெட்டி


புகார் பெட்டி
x
தினத்தந்தி 7 Jun 2023 7:00 PM GMT (Updated: 7 Jun 2023 7:00 PM GMT)

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

தென்காசி

புகாருக்கு உடனடி தீர்வு

தென்காசி மாவட்டம் கடையம் ெரயில் நிலையம் அருகில் குமரேச சீனிவாசா காலனி தெருவில் உள்ள மின்கம்பம் சேதமடைந்த நிலையில் உள்ளதாக திருக்குமரன் என்–ப–வர் அனுப்–பிய பதிவு 'தினத்–தந்தி' புகார் பெட்–டி–யில் வெளி–யா–னது. இதை–ய–டுத்து அங்கு புதிய மின்கம்பம் அமைக்கப்பட்டது. கோரிக்கை நிறை–வேற உறு–து–ணை–யாக இருந்த 'தினத்–தந்தி'க்கும், உடனே நட–வ–டிக்கை மேற்–கொண்ட அதி–கா–ரி–க–ளுக்–கும் அவர் நன்–றி–யும், பாராட்–டும் தெரி–வித்–துள்–ளார்.

குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர்

கடையம் சந்தை அருகில் மெயின் ரோட்டில் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக செல்கிறது. இதனால் அங்கு சாலையும் சேதமடைவதுடன் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. எனவே குழாய் உடைப்பை சரி செய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.

-கண்ணன், கேளையாபிள்ளையூர்.

கிணறு தூர்வாரப்படுமா?

வாசுதேவநல்லூர் அருகே தேவிபட்டினம் ஊராட்சி நடுவூர் ராமசாமிபுரம் 11-வது வார்டில் உள்ள கிணறு பல ஆண்டுகளாக பயன்பாடற்று குப்பை கிடங்காக மாறி விட்டது. எனவே கிணற்றை தூர்வாரி, இரும்பாலான மூடி அமைப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்வார்களா?.

-புஷ்பராஜ், தேவிபட்டினம்.

பஸ்கள் சீராக இயக்கப்படுமா?

தென்காசியில் இருந்து அம்பைக்கு இயக்கப்பட்ட பெரும்பாலான பஸ்கள் கடந்த சில நாட்களாக சரிவர இயக்கப்படவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் பஸ்சுக்காக மணிக்கணக்கில் காத்து நின்று அவதிப்படுகின்றனர். எனவே பஸ்களை சீராக இயக்குவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

-சந்தானம், தென்காசி.

செயல்படாத கண்காணிப்பு கேமரா

செங்கோட்டை- கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் வாஞ்சிநாதன் சிலை அருகில் கனரக வாகனம் சென்றபோது, அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களின் ஒயர்கள் அறுந்து விழுந்தன. பின்னர் அதனை சீரமைக்காததால் கண்காணிப்பு கேமராக்கள் பல நாட்களாக செயல்படவில்லை. எனவே கண்காணிப்பு கேமராக்கள் மீண்டும் செயல்படும் வகையில் ஒயர்களை உயர்த்தி அமைப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்வார்களா?.

-குமாரசாமி, செங்கோட்டை.


Next Story