தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்


தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
x
தினத்தந்தி 8 Jun 2023 12:15 AM IST (Updated: 8 Jun 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

சிவகங்கை

சாலை அகலப்படுத்தப்படுமா?

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் இருந்து கிருஷ்ணாபுரம் வழியாக எஸ்.எஸ்.கோட்டைக்கு செல்லும் இருவழிசாலை குறுகலாக இருப்பதால் வாகனங்கள் ஒன்றைஒன்று முந்தி செல்லும் போது விபத்துக்கள் அடிக்கடி நடக்கிறது. எனவே இந்த சாலையை அகலப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சுந்தர்ராஜ், திருப்பத்தூர்.

விபத்து அபாயம்

சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் இருந்து திருவள்ளூர் கிராமம் வழியாக தாயமங்கலத்திற்கு சாலை செல்கிறது. இந்த சாலையில் திருவள்ளூர் கிராமத்தின் தொடக்கத்திலிருந்து 2 கிலோ மீட்டருக்கு மேல் கண்மாய் கரை உள்ளதால் மழைக்காலங்களில் களிமண் மழைநீருடன் சாலையில் பெருக்கெடுத்து ஓடி வாகனஓட்டிகளுக்கு விபத்துக்களை ஏற்படுத்துகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், இளையான்குடி.

நடவடிக்கை வேண்டும்

சிவகங்கை தாலுகா சூரக்குளம் ரோடு மாரியம்மன் நகரில் குடிநீர் தேவைக்காக கட்டி முடிக்கப்பட்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டி பயன்பாட்டுக்கு வரவில்லை. குடிநீர் இணைப்பும் வழங்கவில்லை. மேலும் அப்பகுதியில் சாலை வசதியும் முறையாக செய்து தரப்படவில்லை. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.

பொதுமக்கள், மாரியம்மன் நகர்.

மின்பிரச்சினை

சிவகங்கை மாவட்டம் உறுதிகோட்டை ஊராட்சி திட்டுக்கோட்டை பகுதியில் குறைந்த மின்னழுத்த பிரச்சினை உள்ளதால் அப்பகுதி மக்கள் இரவு நேரங்களில் மிகவும் அவதிப்படுகின்றனர். இதனால் மின்சாதன பொருட்களும் அடிக்கடி பழுதாகின்றன. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், திட்டுக்கோட்டை.

குண்டும், குழியுமான சாலை

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகரின் மையப் பகுதியான தியாகிகள் சாலை மிக மோசமாக குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் அந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் அவ்வப்போது விபத்தில் சிக்கி காயம் அடைகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.

அஜீஸ் கான், தேவகோட்டை.


Next Story