புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
பொதுமக்கள் அவதி
ராமநாதபுரம் மாவட்டம் புதுமடத்தில் கடந்த சில நாட்களாக இரவில் குறைந்த அழுத்த மின்வினியோக பிரச்சினை உள்ளது. இதனால் வீட்டில் உள்ள மின்சாதன பொருட்கள் அடிக்கடி பழுதாகின்றன. மேலும் இரவு நேரங்களில் பொதுமக்கள் தூங்க முடியாமல் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே இப்பகுதியில் சீரான மின்வினியோகம் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அஸ்பர் ஹூஸைன், புதுமடம்.
வேகத்தடை வேண்டும்
ராமநாதபுரம் நகர் சிவன் கோவில் கிழக்கு தெருவில் இருந்து பானுமதி நாச்சியார் தெரு மற்றும் அரண்மனை தெற்கு தெரு வழியாக செல்லும் சாலையில் வாகனங்கள் வேகமாக செல்கின்றன. இதனால் அப்பகுதி மக்கள் வெளியே செல்ல மிகவும் அச்சப்படுகின்றனர். எனவே இப்பகுதியில் வேகத்தடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மனோகரன், ராமநாதபுரம்.
கூடுதல் வகுப்பறை
ராமநாதபுரம் மாவட்டம் இருமேனி கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு அதிக எண்ணிக்கையிலான மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள். இப்பள்ளியில் போதிய கட்டிட வசதி இல்லாததால் மாணவர்கள் மிகவும் அவதிக்குள்ளாகின்றனர். எனவே இந்த பள்ளிக்கு கூடுதல் வகுப்பறைகள் கட்டித்தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், இருமேனி.
பஸ் நிலையம் அமைக்கப்படுமா?
ராமநாதபுரம் மாவட்டம் திருப்பாலைக்குடியில் பஸ் நிலையம் இல்லாததால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். இதனால் கிழக்கு கடற்கரை சாலையில் பஸ்சுக்காக நீண்ட நேரம் காத்திருந்து பயணிக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் அடிக்கடி விபத்துக்கள் நடக்கிறது. எனவே மாவட்ட நிர்வாகம் திருப்பாலைக்குடியில் பஸ் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்குமா?
அஹமதுகான், திருப்பாலைக்குடி.
நாய்கள் தொல்லை
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிந்து பொதுமக்களை அச்சுறுத்துகிறது. மேலும் நாய்க்கடியால் ரேபிஸ் உள்ளிட்ட நோய்களும் பரவ வாய்ப்பு உள்ளது. நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சிவா, முதுகுளத்தூர்.