புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்


புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
x
தினத்தந்தி 14 Sept 2023 1:00 AM IST (Updated: 14 Sept 2023 1:01 AM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

சிவகங்கை

சுகாதார சீர்கேடு

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதியில் சிலர் குப்பைகளை சாலையில் வீசி செல்கின்றனர். இதனால் குப்பைகள் சாலையில் குவிந்து சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் வாகனஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுத்துகிறது. எனவே குப்பைகள் சாலையில் கொட்டப்படுவதை தடுக்க வேண்டும்.

மணிகண்டன், திருப்புவனம்.

பொதுமக்கள் சிரமம்

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகர் பகுதியில் கொசு தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் சரியான தூக்கமின்றி முதியோர்கள், பெண்கள் சிரமப்படுகின்றனர். எனவே இப்பகுதியில் கொசு மருந்து அடித்து கொசுக்களை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுப்பார்களா?

பாலா, மானாமதுரை.

கூடுதல் பஸ் இயக்கப்படுமா?

சிவகங்கை அரசு ஆஸ்பத்திரிக்கு காலை வேளைகளில் ஏராளமான நோயாளிகள் தினந்தோறும் வந்து செல்கின்றனர். இவர்கள் சிவகங்கை பஸ் நிலையத்தில் இருந்து ஆஸ்பத்திரி க்கு செல்ல ஷேர் ஆட்டோக்களில் அதிக கட்டணம் செலுத்தி பயணிக்கின்றனர். இதனால் நோயாளிகள் பாதிக்கப்படும் நிலை ஏற்படுகிறது. எனவே அரசு ஆஸ்பத்திரிக்கு செல்ல கூடுதல் பஸ் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள், சிவகங்கை.

தெருநாய்கள் தொல்லை

சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் நகர் பகுதியில் தெருநாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிகின்றன. இந்த நாய்கள் சாலையில் செல்பவர்களை துரத்துவதால் பொதுமக்கள் தங்கள் வீட்டை விட்டு வெளியே வர அச்சப்படுகின்றனர். எனவே தெருநாய்களின் தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை தேவை.

மாடசாமி, எஸ்.புதூர்.

போக்குவரத்து நெரிசல்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நகரில் காலை, மாலை வேளைகளில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து காணப்படுகிறது. வாகனஓட்டிகள் நெரிசல் காரணமாக சாலையில் பயணிக்க சிரமப்படுகின்றனர். எனவே போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த வேண்டும்.

அசோக், காரைக்குடி.

1 More update

Next Story