பிரபல திரையரங்கில் நரிக்குறவர்களை படம் பார்க்க அனுமதிக்கவில்லை என புகார் - பணியாளர் மீது வழக்குப்பதிவு


பிரபல திரையரங்கில் நரிக்குறவர்களை படம் பார்க்க அனுமதிக்கவில்லை என புகார் - பணியாளர் மீது வழக்குப்பதிவு
x

அனுமதி மறுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

சென்னை,

நடிகர் சிம்பு நடித்த பத்து தல திரைப்படம் இன்று திரையரங்கில் வெளியானது. இந்த படத்தை கான

பழங்குடியினர் இன மக்கள் சென்னை கோயம்பேட்டில் உள்ள பிரபல திரையரங்கிற்கு வந்துள்ளனர்.அப்போது திரையரங்கில் பழங்குடியினரை படம் பார்க்க அனுமதிக்கவில்லை என புகார் எழுந்தது.

திரையரங்கிற்கு படம் பார்க்க வந்த மக்களை அனுமதிக்கவில்லை என சமூக வலைதளங்களில் பரவிய வீடியோவால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த விவகாரத்தில் அமைந்தகரை தாசில்தார் மாதவன் திரையரங்கிற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார்.

இந்த நிலையில் நரிக்குறவர் மக்களை படம் பார்க்க அனுமதி மறுத்த திரையரங்கு பணியாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அனுமதி மறுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.


Related Tags :
Next Story