மனைவியின் போலீஸ் சீருடையை அணிந்து கணவர் அத்துமீறுவதாக புகார்
மனைவியின் போலீஸ் சீருடையை அணிந்து கணவர் அத்துமீறுவதாக புகார் கொடுத்துள்ளார்.
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்ட பா.ஜ.க. மகளிர் அணி தலைவி அமுதவள்ளி மற்றும் நிர்வாகிகள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு புகார் மனு அளித்தனர். அதில் தஞ்சாவூரில் போலீசாக பணியாற்றி வரும் பெண் ஒருவரின் கணவர், மனைவியின் சீருடையை அணிந்து புகைப்படம் எடுத்து முகநூலில் பயன்படுத்தி அத்துமீறி செயல்படுவதாக தெரிவித்திருந்தனர். இந்த புகார் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே உத்தரவிட்டுள்ளார். அந்த நபர் புதுக்கோட்டை மாவட்டம் குன்றாண்டார் கோவில் பகுதியை சேர்ந்தவர் எனவும், அவரது மனைவி தஞ்சாவூர் போலீசில் பணியாற்றி வருவதும் தெரியவந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story