நடவடிக்கை எடுக்கக்கோரி மகன்களுடன் மனைவி கலெக்டரிடம் புகார் மனு


நடவடிக்கை எடுக்கக்கோரி மகன்களுடன் மனைவி கலெக்டரிடம் புகார் மனு
x
தினத்தந்தி 22 Aug 2023 12:15 AM IST (Updated: 22 Aug 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

மண் திருட்டு தொடர்பாக தகவல் அளித்த கிராம உதவியாளர் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மகன்களுடன் சென்று மனைவி கலெக்டரிடம் புகார் அளித்துள்ளார்

மயிலாடுதுறை

மண் திருட்டு தொடர்பாக தகவல் அளித்த கிராம உதவியாளர் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மகன்களுடன் சென்று மனைவி கலெக்டரிடம் புகார் அளித்துள்ளார்

கலெக்டரிடம் புகார் மனு

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா கிடங்கல் ஊராட்சி நத்தம் கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 45). இவர் திருக்கடையூரில் கிராம வருவாய் அலுவலக உதவியாளராக வேலைப்பார்த்து வருகிறார். இவரது மனைவி மலர்விழி மயிலாடுதுறையில் ஊர்காவல் படையில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் மலர்விழி தனது மகன்களுடன் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து புகார் மனு ஒன்றை அளித்தார். அந்த புகாரில் அவர் கூறியிருப்பதாவது:-

கடந்த ஆகஸ்டு 15-ந் தேதி சுதந்திர தினத்தன்று சட்டவிரோதமாக மருதம்பள்ளம் பகுதியிலிருந்து நத்தம் வழியாக மண் எடுத்து சென்றுள்ளனர். இதனை கண்ட எனது கணவர் ரமேஷ், கிராம சபை கூட்டத்திற்கு இந்த தகவலை தெரிவித்தார். இதனால் மண் எடுப்பதில் பிரச்சினை ஏற்பட்டு மண் எடுப்பது நிறுத்தப்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த சிலர் கடந்த 16-ந் தேதி எனது கணவர் ரமேஷ் வேலைக்கு செல்லும் போது அவரை வழிமறித்து தாக்கியுள்ளனர். இதில் தலை மற்றும் கால்களில் பலத்த காயம் ஏற்பட்ட அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். கடந்த 6 நாட்களாக ரமேஷ் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

நடவடிக்கை எடுக்க உத்தரவு

இந்த சம்பவம் குறித்து தரங்கம்பாடி தாசில்தார், வருவாய் ஆய்வாளர் மற்றும் போலீசாரிடமும் பல முறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார். மனுவை பெற்று விசாரணை செய்த கலெக்டர், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

1 More update

Next Story