நீர்வரத்து ஓடை மீண்டும் ஆக்கிரமிப்பு பொதுமக்கள் புகார் மனு


நீர்வரத்து ஓடை மீண்டும் ஆக்கிரமிப்பு  பொதுமக்கள் புகார் மனு
x
தினத்தந்தி 13 Sep 2023 6:45 PM GMT (Updated: 13 Sep 2023 6:48 PM GMT)

நீர்வரத்து ஓடை மீண்டும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் புகார் மனு கொடுத்தனர்.

சிவகங்கை

தேவகோட்டை,

தேவகோட்டை அருகே உள்ள மருதவயல் கிராமத்தில் உள்ள கண்மாய்க்கு சின்னக்கரையான், பெரியகரையான் ஏந்தலில் இருந்து ஓடை வழியாக தண்ணீர் வருகிறது. இந்த கண்மாய் நிரம்பி வெளியேறும் தண்ணீர் ஆட்டூர், கோவனி கண்மாய்களுக்கு சென்று அங்கிருந்து வெளியேறும் நீர் மேலும் பல கண்மாய்களுக்கு செல்லும். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஓடை ஆக்கிரமிக்கப்பட்டு நீர்வரத்து தடைபட்டது.

இது குறித்து கிராம மக்கள் சார்பில் புகார் அளித்தனர். சிவகங்கை மாவட்ட முன்னாள் கலெக்டர் மதுசூதன்ரெட்டி எடுத்த நடவடிக்கையால் ஆக்கிரமிப்பாளர்கள் சென்னை ஐகோர்ட்டுக்கு சென்று வழக்கு தொடர்ந்தனர் அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்த நீதிமன்றம் நீர் நிலைகளை அப்படியே இருக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது. பின்னர் தேவகோட்டை வட்டாட்சியர் தலைமையில் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பை அகற்றி ஓடையை மீட்டனர்.

இந்நிலையில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட ஓடையில் தண்ணீர் வராமல் தடுக்கும் வகையில் சிலர் ஜே.சி.பி. எந்திரம் மூலம் கரை போட்டு மீண்டும் ஆக்கிரமிப்பு செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க தேவகோட்டை வட்டாட்சியர் செல்வராணி, கிராம நிர்வாக அதிகாரி சசிகுமாருக்கு உத்தரவிட்டார். மேலும் ஓடை ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி கிராம மக்கள் தேவகோட்டை கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியருக்கு மனு அளித்தனர்.


Next Story