அரசு மருத்துவமனை டாக்டர் மீது போலீஸ் சூப்பிரண்டிடம் புகார்


அரசு மருத்துவமனை டாக்டர் மீது போலீஸ் சூப்பிரண்டிடம் புகார்
x

அரசு மருத்துவமனை டாக்டர் மீது போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் அளிக்கப்பட்டது.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் நர்சாக பணிபுரியும் ஸ்டீபன் சாம்ராஜ் என்பவரது சார்பில், அவரது ஆதரவாளர்கள், வக்கீல்கள் மாவட்ட போலீஸ் அலுவலகத்துக்கு நேற்று வந்தனர். அப்போது அவர்கள் போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவியை சந்தித்து ஒரு புகார் மனு கொடுத்தனர். அதில், பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையின் கண்காணிப்பாளராக பணிபுரிந்து, தற்போது அதே மருத்துவமனையில் டாக்டராக பணிபுரியும் ஒருவர், நர்ஸ் ஸ்டீபன் சாம்ராஜுக்கு மன உளைச்சல் தரும் வகையில், சாதி பெயரை சொல்லி திட்டி அவமானப்படுத்தி, போலீஸ் உயர் அதிகாரிகளை வைத்து மிரட்டி, செய்யாத குற்றத்தை செய்ததாக எழுதி வாங்க முயற்சித்து வருகிறார். மேலும் அவர் கொலை மிரட்டல் விடுத்ததால் உயிருக்கு பாதுகாப்பற்ற நிலையில் உள்ள நர்ஸ் ஸ்டீபன் சாம்ராஜுக்கு உரிய பாதுகாப்பும், நீதியும் கிடைக்க வேண்டும். மேலும் அந்த டாக்டரிடம் உரிய விசாரணை நடத்தி, அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறப்பட்டிருந்தது. புகார் மனுவினை பெற்றுக்கொண்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.


Next Story