ஓமலூர் உணவகங்களில் ரசாயனம் கலக்கப்படுவதாக புகார் - உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு


ஓமலூர் உணவகங்களில் ரசாயனம் கலக்கப்படுவதாக புகார் - உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு
x

சேலம் மாவட்டம் ஓமலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள உணவகங்களில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

ஓமலூர்,

சேலம் மாவட்டம் ஓமலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள உணவகங்களில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். உணவுகளில் அதிகளவு ரசாயனம் கலக்கப்படுவதாக புகார்கள் குவிந்த நிலையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

ஓமலூர், கமலாபுரம், தாராபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள உணவகங்களில் ஆய்வு செய்த அதிகாரிகள், அங்கிருந்து பிரியாணி உள்ளிட்ட உணவுகளை ஆய்வுக்காக எடுத்துச் சென்றனர். அத்துடன் உணவகங்களில் பார்சலுக்காக பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் எண்ணெய்களை தொடர்ந்து இரண்டு முறைக்கு மேல் பயன்படுத்தக்கூடாது என்று அறிவுரை வழங்கப்பட்டது.

தொடர்ந்து எடுத்துச் செல்லப்பட்ட உணவுப் பொருட்களை ஆய்வகத்திற்கு அனுப்பி அதில் ரசாயனம் கலக்கப்பட்டுள்ளதா என்று அதிகாரிகள் ஆய்வுக்கு உட்படுத்தினர். ரசாயனம் கலந்துள்ளதாக உறுதி செய்யப்பட்டால் உணவகங்களுக்கு சீல் வைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story