போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பெண்கள் புகார்


போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பெண்கள் புகார்
x

போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பெண்கள் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை

திருமயம் அருகே நச்சாந்துப்பட்டி, ஒச்சம்பட்டி, பிராமணப்பட்டி கிராமங்களை சேர்ந்த மகளிர் சுய உதவிக்குழு பெண்கள் சிலர் நேற்று புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு புகார் மனு அளித்தனர். இதில் நச்சாந்துப்பட்டி பகுதியை சேர்ந்த மைதிலி என்பவர், சுய உதவிக்குழு பெண்கள் பெற்ற கடன் தொகையை பல்வேறு ஆசை வார்த்தைகளை கூறி, ரூ.50 லட்சம் வரை கடனாக பெற்று மோசடி செய்ததாகவும், பணத்தை மீட்டு தரக்கோரியும், அவர் மீது நடவடிக்கை எடுக்கவும் கூறியிருந்தனர். மனுவை பெற்ற போலீசார் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர்.


Next Story