பணி நிறைவு பாராட்டு விழா
பணி நிறைவு பாராட்டு விழா நடைபெற்றது.
அரியலூர்
அரியலூர் மாவட்டம், தா.பழூர் ஒன்றியம், சுத்தமல்லி கிராமத்தை சேர்ந்தவர் அப்பாசாமி. இவர் நாச்சியார் பேட்டையில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக 15 ஆண்டுகள் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் இவர் நாளை (ஞாயிற்றுக்கிழமை) பணி ஓய்வு பெறுகிறார். அவரின் பணி நிறைவு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதில் வட்டார கல்வி அலுவலர் அசோகன், தலைமை ஆசிரியர் ராஜேஸ்வரி, பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டு அப்பாசாமியின் பணியை வாழ்த்தி பேசினர். தொடர்ந்து அப்பாசாமிக்கும், அவரது மனைவி ராஜலட்சுமிக்கும் சால்வை, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு சிறப்பு மதிய உணவு வழங்கப்பட்டதுடன், பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது.
Related Tags :
Next Story