தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி நிறைவு விழா

தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி நிறைவு விழா
x

வி.ஐ.டி.யில் தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு நடந்த திறன்மேம்பாட்டு பயிற்சி நிறைவு விழாவில் வி.ஐ.டி.வேந்தர் விசுவநாதன் கலந்து கொண்டார்.

வேலூர்

காட்பாடி

வி.ஐ.டி.யில் தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு நடந்த திறன்மேம்பாட்டு பயிற்சி நிறைவு விழாவில் வி.ஐ.டி.வேந்தர் விசுவநாதன் கலந்து கொண்டார்.

தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு இணைய வழி திறன் மேம்பாட்டு பயிற்சி மையங்களில் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. வேலூர் மாவட்டத்தில் வி.ஐ.டி பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள கணினி மையத்தில் பயிற்சி நடந்தது. இதன் நிறைவு விழா நேற்று நடந்தது. விழாவிற்கு வி.ஐ.டி. பல்கலைகழக வேந்தர் கோ.விசுவநாதன் தலைமை தாங்கி பேசுகையில், ''மாணவர்களின் கல்வி மேம்படவும் திறன் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கல்வி அளிக்கப்பட உள்ளது மாணவர்களுக்கு நன்மை அளிக்கும். கல்வியில் கடைசி இடத்தில் உள்ள வேலூர் மாவட்டம் சிறப்பான இடம் பெறுவதற்கு ஆசிரியர்கள் கடுமையாக உழைக்க வேண்டும்'' என்றார்.

இதில் தொழிற்கல்வி ஆசிரியர் செ.நா.ஜனார்த்தனன் வரவேற்றார். தொழிற்கல்வி ஆசிரியர்கள் க.ராஜா, எஸ், ரமேஷ், எம்.நாகலிங்கம், கே.பழனி, இ.ராமன் ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர்.

பயிற்சி குறித்து கருத்தாளர்கள் மணிவாசகம், சமீர்அகமது ஆகியோர் விளக்கம் அளித்தனர். முடிவில் பயிற்சி ஒருங்கிணைப்பாளர் கோபி நன்றி கூறினார்.

==========

Next Story