மாணவ, மாணவிகள் உற்சாகம்
பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிந்து விடுமுறை தொடங்கியதை அடுத்து மாணவர்கள் உற்சாகமாக துள்ளி குதித்தனர்.
நாமக்கல்
தமிழகம் முழுவதும் பிளஸ்-1 மாணவர்களுக்கு கடந்த மாதம் 14-ந் தேதி பொதுத்தேர்வு தொடங்கியது. நாமக்கல் மாவட்டத்தில் இந்த ஆண்டு பிளஸ்-1 தேர்வை 18,568 மாணவ, மாணவிகள் எழுதினர். இதற்காக மாவட்டம் முழுவதும் 85 மையங்கள் ஏற்படுத்தப்பட்டு இருந்தன.
நேற்று கடைசி தேர்வாக கணிதம், விலங்கியல், மைக்ரோ பையாலஜி போன்ற தேர்வுகள் நடந்தன. மதியம் 1.15 மணிக்கு தேர்வு முடிந்து வெளியே வந்த மாணவ, மாணவிகள் உற்சாகம் அடைந்தனர். தங்களது உற்சாகத்தை வெளிப்படுத்தும் வகையில் ஒருவரை ஒருவர் கட்டித்தழுவினர். மாணவர்கள், ஒருவர் மீது ஒருவர் சட்டையில் மை அடித்துக் கொண்டனர். அதேபோல் மாணவிகள் தங்களது தோழிகளுடன் செல்பி எடுத்து பரவசம் அடைந்தனர். மேலும் தேர்வு முடிந்து, விடுமுறை தொடங்கியதை அடுத்து மாணவர்கள் உற்சாகமாக துள்ளி குதித்தனர்.
Related Tags :
Next Story