அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி நிறைவு
அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி நிறைவு
திருவாரூரில் அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி நிறைவு விழா நடைபெற்றது. இதில் பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ. கலந்துகொண்டார்.
கண்காட்சி
திருவாரூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி திருவாரூர் தாசில்தார் அலுவலகம் அலுவலகம் அருகில் வன்மீகபுரத்தில் நடந்தது. 10 நாட்கள் நடந்த இந்த கண்காட்சி நேற்றுமுன்தினம் நிறைவு பெற்றது. அனைத்துத்துறைகளின் காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டு மக்களுக்கு நலத்திட்டங்கள் குறித்தும், துறைகளின் மூலம் வழங்கப்படும் அலுவல் ரீதியான பணிகள் குறித்தும் விளக்கப்பட்டது. இந்த கண்காட்சியில் தினமும் கலை நிகழ்ச்சிகள், உணவுத்திருவிழாக்கள், குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு ஆகியவை நடந்தது. இதில் தினமும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு அரசின் சாதனைகள், திட்டங்கள் குறித்து தெரிந்து கொண்டனர்.
பரிசுகள்
அரசின் நலத்திட்ட உதவிகளை பெறுவதற்கான வழிமுறைகளை அறிந்து கொள்ள இந்த கண்காட்சி பயனுள்ளதாக அமைந்தது என்று பொதுமக்கள் தெரிவித்தனர். நிகழ்ச்சியின் போது துறைவாரியாக அரங்குகள் அமைத்தவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
நிறைவு விழாவில் திருவாரூர் மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம், பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ., திருவாரூர் நகர்மன்ற துணைத்தலைவர் அகிலா சந்திரசேகர், நகர்மன்ற உறுப்பினர் பிரகாஷ் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலர் தனபால், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.