எண்ணும் எழுத்தும் விழா நிறைவு


எண்ணும் எழுத்தும் விழா நிறைவு
x
தினத்தந்தி 15 April 2023 12:15 AM IST (Updated: 15 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கோடியக்காடு அரசு உதவி பெறும் பள்ளியில் எண்ணும் எழுத்தும் விழா நிறைவு நடந்தது.

நாகப்பட்டினம்

வேதாரண்யம்:

வேதாரண்யத்தை அடுத்த கோடியக்காடு அரசு உதவிபெறும் பள்ளியில் எண்ணும் எழுத்தும் ஓராண்டு நிறைவு விழா நடைபெற்றது.விழாவிற்கு கோடியக்காடு ஊராட்சி மன்ற தலைவர். தமிழ்மணி, தலைமை தாங்கினார். துணைத்தலைவர் சரவணன், முன்னிலை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் நீலமேகம் வரவேற்றார். நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள் குணசுந்தரி, சாந்தி, கவிதா, மணிமாலா, . புஷ்பா, இல்லம் தேடிக்கல்வி தன்னார்வலர்கள் மீனாம்பாள், தாமரைச்செல்வி ஆகியோர் கலந்து கொண்டனர். எண்ணும் எழுத்தும் அலங்கரிக்கப்பட்ட வகுப்பறையில் 1 முதல் 3 வரை பயிலும் மாணவர்களால் பாடப்புத்தகத்தில் உள்ள தமிழ் மற்றும் ஆங்கில பாடல்கள், வாசித்தல், என் மேடை என் பேச்சு, செய்தித்தாள் வாசித்தல் போன்ற நிகழ்ச்சி நடந்தது. மேலும் 5-ம் வகுப்பு மாணவர்களால் கரகம் மற்றும் சிலம்பம் சுற்றுதல் நிகழ்ச்சி நடந்தது. பல்வேறு போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்மணி பரிசுகளை வழங்கினார். முடிவில் ஆசிரியை கவிதா நன்றி கூறினார்.


Next Story