1,224 டன் யூரியா உரம் தஞ்சைக்கு வந்தது


1,224 டன் யூரியா உரம் தஞ்சைக்கு வந்தது
x

சென்னையில் இருந்து சரக்குரெயில் மூலம் 1,224 டன் யூரியா உரம் தஞ்சைக்கு வந்தது. இந்த உரம் 4 மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

தஞ்சாவூர்

தஞ்சாவூர்;

சென்னையில் இருந்து சரக்குரெயில் மூலம் 1,224 டன் யூரியா உரம் தஞ்சைக்கு வந்தது. இந்த உரம் 4 மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

சம்பா, தாளடி நெல் சாகுபடி

தமிழகத்தின் நெற்களஞ்சியமாக திகழும் காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் நெல் சாகுபடி நடைபெறும். இதற்காக மேட்டூர் அணை ஜூன் மாதம் 12-ந்தேதி திறக்கப்படும்.குறிப்பிட்ட தேதியில் இருந்து அணை திறக்கப்பட்டால் குறுவை பரப்பளவு அதிகரிக்கும். இந்த ஆண்டு மேட்டூர் அணை முன்கூட்டியே மே மாதத்தில் திறக்கப்பட்டதால் குறுவை சாகுபடி எதிர்பார்க்கப்பட்ட இலக்கை விட அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டது. தற்போது சம்பா, தாளடி நெல் சாகுபடி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

1,224 டன் யூரியா உரம்

சம்பா, தாளடி நெல் சாகுபடிக்கு தேவையான உரம் தட்டுப்பாடு இன்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர். இந்த நிலையில் சென்னை தண்டையார்பேட்டையில் இருந்து சரக்கு ரெயிலில் 21 வேகன்களில் 1,224 டன் யூரியா உரம் தஞ்சை ரெயில் நிலையத்திற்கு நேற்று கொண்டு வரப்பட்டது.பின்னர் தஞ்சை ரெயில் நிலையத்தில் இருந்து இந்த உர மூட்டைகள் லாரிகளில் ஏற்றப்பட்டு டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்த உரம் தனியார் மற்றும் கூட்டுறவு விற்பனை நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வினியோகம் செய்யப்பட உள்ளது.


Next Story