11 வழக்குகளுக்கு சமரச தீர்வு


11 வழக்குகளுக்கு சமரச தீர்வு
x
தினத்தந்தி 14 Oct 2023 6:45 PM GMT (Updated: 14 Oct 2023 6:45 PM GMT)

சிவகங்கை மாவட்ட அளவிலான மக்கள் நீதிமன்றங்கள் மூலம் 11 வழக்குகளுக்கு சமரசதீர்வு காணப்பட்டது.

சிவகங்கை

சிறப்பு மக்கள் நீதிமன்றம்

தேசிய சட்டப் பணிகள் ஆணையத்தின் உத்தரவுப்படியும் மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணையத்தின் வழிகாட்டுதலின் படியும், சிவகங்கை மாவட்டத்தில் சிறப்பு மக்கள் நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டு மாவட்டத்திலுள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் நிலுவையில் உள்ள சிவில் வழக்குகளும், சமரச குற்றவியல் வழக்குகளும், மோட்டார் வாகன விபத்து வழக்குகளும், வருவாய் துறை வழக்குகளும், விசாரிக்கப்பட்டது.

தலைவர் மற்றும் முதன்மை மாவட்ட நீதிபதி குருமூர்த்தி, நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி பக்கதவச்சலு, ஊழல் மற்றும் தடுப்பு சிறப்பு நீதிபதி செந்தில் முரளி, மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு செயலாளர் மற்றும் சார்பு நீதிபதி பரமேஸ்வரி ஆகியோர் வழக்குகளை விசாரித்தனர்.

சமரச தீர்வு

இந்த சிறப்பு மக்கள் நீதிமன்றங்களில் 15 வங்கி கடன் வழக்குகளும், 91 மோட்டார் வாகன விபத்து நஷ்ட ஈடு வழக்குகளும், 31 சிவில் சம்பந்தப்பட்ட வழக்குகளும், 27 காசோலைகள் வழக்குகளும், 90 குடும்ப நல வழக்குகளும் இதர குற்ற வழக்குகள் 220 என மொத்தம் 474 வழக்குகள் பரிசீலனைக்கு எடுக்கப்பட்டு 11 வழக்குகள் சமரசமாக தீர்க்கப்பட்டது.

இதன்மூலம் ரூ.62 லட்சத்து 35ஆயிரம் வரையில் வழக்காடிகளுக்கு கிடைத்தது. இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு பணியாளர்கள் செய்திருந்தனர்.

இதில் வக்கீல்கள் மற்றும் பயனாளர்கள் கலந்து கொண்டனர்.


Next Story