கணினி பயன்பாட்டியல் பேரவை கூட்டம்


கணினி பயன்பாட்டியல் பேரவை கூட்டம்
x

கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியில் கணினி பயன்பாட்டியல் பேரவை கூட்டம் நடந்தது.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியில் கணினி பயன்பாட்டியல் துறை சார்பில் பேரவை கூட்டம் நடந்தது. கல்லூரி முதல்வர் ஜெயந்தி தலைமை தாங்கினார். கணினி பயன்பாட்டியல் துறை மாணவி சுபாஷினி வரவேற்று பேசினார்.

மகாலட்சுமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மேக கணினியம் தொழில் நுட்பத்தில் உள்ள வேலைவாய்ப்புகள் என்ற தலைப்பில் பேசினார். கணினி பயன்பாட்டியல் துறை தலைவர் அனிதா மற்றும் பேராசிரியர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை உதவி பேராசிரியை கிருஷ்ணவேணி செய்து இருந்தார். மாணவி ரேணுகா நன்றி கூறினார்.


Next Story