வீராணம் அரசு பள்ளிக்கு கம்ப்யூட்டர் உபகரணங்கள்


வீராணம் அரசு பள்ளிக்கு கம்ப்யூட்டர் உபகரணங்கள்
x

வீராணம் அரசு பள்ளிக்கு கம்ப்யூட்டர் உபகரணங்கள் வழங்கும் விழா நடந்தது.

தென்காசி

சுரண்டை:

வீராணம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ மாணவிகளுக்கான கம்ப்யூட்டர் உபகரணங்கள் வழங்கும் விழா நடந்தது. ஆலங்குளம் வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் அன்பழகன் தலைமை தாங்கினார். மாவட்ட ஊராட்சி தலைவர் தமிழ்செல்வி போஸ், வீராணம் கிராம பஞ்சாயத்து தலைவர் வீரபாண்டியன், தலைமை ஆசிரியர் ஜான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி மேலாண்மை குழு தலைவர் செல்லத்துரைச்சி பாலசுப்பிரமணியன் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் கலந்து கொண்டு தனது சொந்த செலவில் கம்ப்யூட்டர் உபகரணங்களை வழங்கினார். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட கல்வி மேலாண்மை குழு தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தார். நிகழ்ச்சியில் வீராணம் கிளை செயலாளர் பாலசுப்பிரமணியம், வீராணம் முஸ்தபா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story