விஜயகரிசல்குளம் அகழாய்வில் கிடைத்த சங்கு வளையல்


விஜயகரிசல்குளம் அகழாய்வில் கிடைத்த சங்கு வளையல்
x

விஜயகரிசல்குளம் அகழாய்வில் சங்கு வளையல் கிடைத்தது.

விருதுநகர்

தாயில்பட்டி,

வெம்பக்கோட்டை தாலுகா விஜயகரிசல்குளத்தில் நடைபெற்று வரும் 2-ம் கட்ட அகழாய்வில் தொடர்ந்து பண்டைய காலத்தில் பயன்படுத்தப்பட்ட பொருட்கள் கிடைத்து வருகின்றன.இதில் பெண்கள் அணியக்கூடிய அணிகலனான பதக்கம் (தொங்கட்டான்) மற்றும் சேதமடைந்த நிலையில் சங்கினால் செய்யப்பட்ட வளையல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. முதல் கட்ட அகழாய்வில் கிடைத்தது போன்று சங்கினால் செய்யப்பட்ட வளையல்கள் தற்போதும் கிடைத்திருக்கிறது. இதுவரை 2-வது கட்ட அகழாய்வில் 7 குழிகள் தோண்டப்பட்டுள்ளன. 13 அடி ஆழம் வரை தோண்டப்பட்டுள்ளது. அதில் சுடுமண்ணால் ஆன பொம்மைகள், யானை தந்ததால் செய்யப்பட்ட பகடை காய்கள், தங்க அணிகலன், புகைபிடிப்பான் கருவி, எடை கற்கள், ஏராளமான மண் ஓடுகள், கண்ணாடி மணிகள், நெசவுத் தொழிலுக்கு பயன்படுத்தப்பட்ட தக்களி, ஏற்றுமதிக்கு பயன்படுத்தப்பட்ட வணிக முத்திரை, உள்பட 1,910 பொருட்கள் கிடைத்துள்ளதாக தொல்லியல் துறையினர் தெரிவித்தனர். வருகிற 15-ந் தேதி கூடுதலாக குழிகள் தோண்டப்பட உள்ளன. அதிலும் ஏராளமான பொருட்கள் கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தனர்.


Next Story