கான்கிரீட் தளம் அமைக்கும் பணிகள் தீவிரம்


கான்கிரீட் தளம் அமைக்கும் பணிகள் தீவிரம்
x

மழைநீர் செல்வதற்கு வசதியாக ரூ.4 கோடியில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

நீலகிரி

ஊட்டி,

மழைநீர் செல்வதற்கு வசதியாக ரூ.4 கோடியில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

ஊட்டி-மஞ்சூர் சாலை

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் இருந்து மஞ்சூருக்கு 32 கிலோ மீட்டர் தூரம் சாலை செல்கிறது. மாநில நெடுஞ்சாலை துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த சாலை வழியாக கைகாட்டி, குந்தா, மஞ்சூர், ஹெத்தை உள்ளிட்ட இடங்களுக்கு வாகனங்கள் சென்று வருகின்றன. அனைவரும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் இந்த சாலையில் செல்வதால் எப்போதும் போக்குவரத்து நெரிசல் காணப்படும்.

இந்த நிலையில் தற்போது அந்த சாலையை சரி செய்யும் பணிகள் கடந்த சில நாட்களாக தீவிரமாக நடந்து வருகின்றன. இது குறித்து நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கூறியதாவது:-

கான்கிரீட் தளம்

மாநில நெடுஞ்சாலைகள் ஒவ்வொரு 5 வருடத்திற்கு ஒரு முறையும் செப்பனிடப்பட்டு சரி செய்யப்படும். இதன்படி தற்போது ஊட்டியில் இருந்து மஞ்சூர் செல்லும் சாலையில் அமைத்து 5 வருடங்கள் ஆகிவிட்டதால் தற்போது சரி செய்யும் பணிகளை தொடங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. ஆனால் தென்மேற்கு பருவமழை காரணமாக சாலையில் தார் ஊற்ற முடியவில்லை.

எனவே சாலை மட்டத்திற்கு நிகராக கான்கிரீட் தளம் அமைக்கும் பணிகள் முதலில் தொடங்கப்பட்டு அந்த பணிகள் தற்போது தீவிரமாக நடந்து வருகின்றன. ஒரு சில நாட்களில் இந்த பணிகள் முடிந்து விடும். இதன்படி காந்திநகர் சந்திப்பில் இருந்து லவ்டேல் பாலம் வரை ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கும், கொல்லிமலை முதல் பாலகொலா சந்திப்பு வரை 4 கிலோ மீட்டர் தூரத்திற்கும், காத்தாடி மட்டத்திலிருந்து தேவர்சோலை வரை 4 கிலோ மீட்டர் தூரத்திற்கும் கான்கிரீட் தளம் அமைக்கப்பட்டு வருகிறது.

இதன் பின்னர் கான்கிரீட் தளத்தின் மட்டத்திற்கு நிகராக சாலையில் தார் ஊற்றப்படும். இந்த பணிகள் ரூ.4 கோடி செலவில் மேற்கொள்ளப்படுகிறது.

இந்த கான்கிரீட் தளம் மூலம் மழை நீர் செல்வதற்கு வசதியாக இருக்கும். இவ்வாறு அவர்கள் கூறினார்.


Next Story