அரியப்பம்பாளையத்தில் ரூ.12 லட்சத்தில் கான்கிரீட் சாலை
அரியப்பம்பாளையத்தில் ரூ.12 லட்சத்தில் கான்கிரீட் சாலை
சத்தியமங்கலம்
சத்தியமங்கலத்தை அடுத்த அரியப்பம்பாளையம் பேரூராட்சியில் உள்ள 5-வது வார்டு மற்றும் 8-வது வார்டு பகுதியில் கான்கிரீட் சாலை அமைக்க ரூ.12 லட்சம் ஒதுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து சாலை அமைக்கும் பணி தொடக்க விழா நடந்தது. விழாவுக்கு அரியப்பமபாளையம் பேரூராட்சி தலைவி மகேஸ்வரி செந்தில்நாதன் தலைமை தாங்கி பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார். இதில் அரியப்பம்பாளையம் பேரூர் தி.மு.க. செயலாளர் வக்கீல் ஏ.எஸ்.செந்தில்நாதன், மாவட்ட பிரதிநிதி என்.துரைசாமி, பேரூர் கழக துணைச்செயலாளர் மாதேஸ்வன், 5-வது வார்டு செயலாளர் பாலகிருஷ்ணன், அவைத்தலைவர் மணி, வார்டு கவுன்சிலர்கள் ராதா, ராஜலட்சுமி, வார்டு துணைச்செயலாளர் நவீன் குமார், ஈரோடு வடக்கு மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர் அணி துணை அமைப்பாளர் எஸ்.டி.கந்தசாமி, பேரூராட்சி பணியாளர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.