சுங்க கட்டண வசூலை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


சுங்க கட்டண வசூலை கண்டித்து  நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x

சுங்க கட்டண வசூலை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் தேனியில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்

தேனி

தேனி அருகே உப்பார்பட்டியில் சுங்கச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. இங்கு நாளை மறுநாள் (சனிக்கிழமை) முதல் சுங்க கட்டணம் வசூல் செய்யப்படும் என்று தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில், இந்த சுங்கச் சாவடி திறப்பதை கண்டித்தும், கட்டணம் வசூல் செய்வதை கண்டித்தும் தேனி நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் அலுவலகம் முன்பு, நாம் தமிழர் கட்சி சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு கிழக்கு மாவட்ட செயலாளர் ஜெயக்குமார் தலைமை தாங்கினார். தேனி நாடாளுமன்ற தொகுதி செயலாளர் பிரேம்சந்தர் மற்றும் மாவட்ட, நகர நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு பேசினர். ஆர்ப்பாட்டத்தின் போது சுங்க வரி வசூல் செய்வதை கண்டித்தும், சுங்கச்சாவடியை அற்றக்கோரியும் கோஷங்கள் எழுப்பினர்.


Next Story