இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் 157 பேர் கைது
இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் 157 பேர் கைது
திருப்பூர்
திருப்பூர்
இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் திருப்பூர் புதிய பஸ் நிலையம் எதிரே பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன் மறியல் போராட்டம் நேற்று காலை நடைபெற்றது. விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் அதிகரிப்பு, பொதுத்துறை நிறுவனங்கள் தனியார்மயம், சிறு, குறு தொழில்கள் நலிவடைந்து தொழில் பாதிப்பு உள்ளிட்டவைகளுக்கு நடவடிக்கை எடுக்காத மத்திய பா.ஜனதா அரசை கண்டித்து மறியல் போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்தில் கட்சியின் மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன், ஏ.ஐ.டி.யு.சி. பொதுச்செயலாளர் பி.ஆர்.நடராஜன், பனியன் சங்க செயலாளர் சேகர் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். மத்திய அரசை கண்டித்து சாலையில் அமர்ந்து கண்டன கோஷங்கள் எழுப்பினார்கள். மறியலில் ஈடுபட்ட 91 பெண்கள் உள்பட 157 பேரை வடக்கு போலீசார் கைது செய்து அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.
Related Tags :
Next Story