100 நாள் வேலை வழங்காததை கண்டித்து பண்ருட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பெண்கள் முற்றுகை
100 நாள் வேலை வழங்காததை கண்டித்து பண்ருட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டனர்.
கடலூர்
பண்ருட்டி,
பண்ருட்டி அடுத்த விசூர் ஊராட்சி அன்னங்காரன்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர்களுக்கு ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் வேலை வழங்கவில்லை என்று தெரிகிறது. இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள் 50-க்கும் மேற்பட்டோர் நேற்று, திரண்டு வந்து பண்ருட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப்போது, 100 நாள் வேலை வழங்காமல் அலட்சியமாக செயல்படும் ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து கோஷம் எழுப்பினர். இதுபற்றி தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற, வட்டார வளர்ச்சி அலுவலர் சக்தி போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது வேலை வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story