எடப்பாடி பழனிசாமியை கண்டித்து ஓ‌.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம்


எடப்பாடி பழனிசாமியை கண்டித்து  ஓ‌.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம்
x

போடியில் எடப்பாடி பழனிசாமியை கண்டித்து ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

தேனி

போடியில், தேவர் சிலை முன்பு அ.தி.மு.க.வை சேர்ந்த ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது எடப்பாடி பழனிச்சாமியை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். ஜெயலலிதாவின் உண்மையான விசுவாசி ஓ.பன்னீர்செல்வம் தான் என்றும், எடப்பாடி பழனிசாமியை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் போடி நகர செயலாளர்கள் பழனிராஜ், ஜெயராம் பாண்டியன், அவைத்தலைவர் வேல்முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story