4 மாதம் சம்பளம் வழங்காததை கண்டித்துகூடலூர் அரசு கல்லூரி ஊழியர்கள் போராட்டம்


4 மாதம் சம்பளம் வழங்காததை கண்டித்துகூடலூர் அரசு கல்லூரி ஊழியர்கள் போராட்டம்
x

கூடலூர் அரசு கல்லூரி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட போது எடுத்த படம்.

தினத்தந்தி 18 Aug 2023 12:15 AM IST (Updated: 18 Aug 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

4 மாதங்களாக சம்பளம் வழங்காததை கண்டித்து கூடலூர் அரசு கல்லூரி ஊழியர்கள் போராட்டம் நடத்தினர்.

நீலகிரி

கூடலூர்: 4 மாதங்களாக சம்பளம் வழங்காததை கண்டித்து கூடலூர் அரசு கல்லூரி ஊழியர்கள் போராட்டம் நடத்தினர்.

4 மாத சம்பளம் வழங்கவில்லை

நீலகிரி மாவட்டம் கூடலூர் உட்பட தமிழகத்தில் உள்ள 41 பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரிகள் கடந்த 2019-ம் ஆண்டு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளாக மாற்றப்பட்டது. இந்த கல்லூரிகளில் பணியாற்றி வரும் கவுரவ விரிவுரையாளர்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள் இதுவரை பணி நிரந்தரம் செய்யப்படவில்லை. குறிப்பாக கூடலூரில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பணியாற்றும் குறிப்பிட்ட அளவிலான கவுரவ விரிவுரையாளர்கள் மற்றும் அலுவலக ஊழியர்களுக்கு அரசு மூலம் சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது. மீதமுள்ளவர்களுக்கு பாரதியார் பல்கலைக்கழகம் மூலமாக சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது.

இதில் அரசிடம் இருந்து சம்பளத்தை பெற்று வந்த அலுவலக ஊழியர்களுக்கு கடந்த 4 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அவர்கள் பொருளாதார ரீதியாக கஷ்டப்படுகின்றனர்.

போராட்டம்

இ்ந்த நிலையில் நேற்று 4 மாதமாக சம்பளம் வழங்கப்படாததை கண்டித்து கூடலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முன்பு அலுவலக ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள் கூறியதாவது:- ெதாடர்ந்து 4 மாதமாக எங்களுக்கு சம்பளம் வழங்கப்படாததால் குடும்பத்தை நடத்த மிகவும் கஷ்டப்படுகிறோம். இதுதொடர்பாக விசாரித்தபோது தங்களுக்கு சம்பளம் வழங்குவதற்கான பட்ஜெட் ஒதுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதேபோல் தமிழகத்தில் உள்ள 41 கல்லூரிகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கும் சம்பளம் வழங்கப்படவில்லை. பணி பாதுகாப்பு இல்லாத நிலையில் தற்போது சம்பளம் வழங்காமல் இருப்பது எங்களை பெரிதும் பாதிக்கிறது. இருப்பினும் வழக்கம்போல் பணிகளை தொடர்ந்து கவனித்து வருகிறோம். எனவே, அரசு தங்கள் பிரச்சினையில் கவனம் செலுத்தி சம்பளத்தை உடனே வழங்குவதோடு தங்களுக்கு பணி பாதுகாப்பையும் உறுதி செய்திட வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.



Related Tags :
Next Story