மின் கட்டண உயர்வை கண்டித்து கோபி நகராட்சி கூட்டத்தில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு


மின் கட்டண உயர்வை கண்டித்து   கோபி நகராட்சி கூட்டத்தில்  அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு
x
தினத்தந்தி 1 Oct 2022 1:00 AM IST (Updated: 1 Oct 2022 1:00 AM IST)
t-max-icont-min-icon

கவுன்சிலர்கள் வெளிநடப்பு

ஈரோடு

மின்கட்டண உயர்வை கண்டித்து கோபி நகராட்சி கூட்டத்தில் அ.தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

வெளிநடப்பு

கோபி நகராட்சி மாதாந்திர கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு நகராட்சி தலைவர் என்.ஆர். நாகராஜ் தலைமை தாங்கினார். ஆணையாளர் பிரேம் ஆனந்த் முன்னிலை வகித்தார். கூட்டம் காலை 10 மணிக்கு தொடங்கியது. இதில் அ.தி.மு.க.வை சேர்ந்த 13 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

அப்போது அவர்கள் தமிழகத்தில் மின் கட்டண உயர்வை கண்டித்தும், அதனை திரும்ப பெறக் கோரியும் கையில் பதாகைகள் ஏந்தியிருந்தனர். திடீரென அவர்கள் கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். பின்னர் நகராட்சி அலுவலகத்துக்கு முன்பு நின்று கோஷம் எழுப்பினார்கள்.

கோஷம்

சிறிது நேரம் கழித்து கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக உள்ளே வந்தனர். அப்போது கூட்டத்தில் 37 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதனால் அ.தி.மு.க. உறுப்பினர்கள் மீண்டும் வெளியே சென்றனர்.

அலுவலகம் முன்பு நின்று தீர்மானங்களை நிறைவேற்றிய நகராட்சி தலைவரை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினார்கள். பின்னர் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் நகராட்சி அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Related Tags :
Next Story