குற்ற சம்பவங்கள் மீது நடவடிக்கை எடுக்காததை கண்டித்து ஈரோட்டில் டிசம்பர் மாதம் 17-ந் தேதி மாநாடு இந்து முன்னணி மாநில தலைவர் அறிவிப்பு


குற்ற சம்பவங்கள் மீது நடவடிக்கை எடுக்காததை கண்டித்து  ஈரோட்டில் டிசம்பர் மாதம் 17-ந் தேதி மாநாடு   இந்து முன்னணி மாநில தலைவர் அறிவிப்பு
x
தினத்தந்தி 19 Oct 2023 2:48 AM IST (Updated: 19 Oct 2023 2:49 AM IST)
t-max-icont-min-icon

குற்ற சம்பவங்கள் மீது நடவடிக்கை எடுக்காததை கண்டித்து ஈரோட்டில் டிசம்பர் மாதம் 17-ந் தேதி மாநாடு நடத்தப்படும் என்று இந்து முன்னணி மாநில தலைவர் அறிவித்தாா்

ஈரோடு

சத்தியமங்கலம் ரங்கசமுத்திரம் பகுதியில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் ஈரோடு மேற்கு மாவட்ட இந்து முன்னணி நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் கிஷோர், மாவட்ட தலைவர் குருசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார், அப்போது அவர் கூறும்போது, 'ஈரோடு மாவட்டத்தில் கஞ்சா, விபசாரம், லாட்டரி சீட்டு, மது விற்பனை பெருகிவிட்டது. மேலும் சத்தியமங்கலத்தில் இருந்து இருந்து ரேஷன் அரிசி கடத்தப்படுகிறது. இந்த குற்ற சம்பவங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாததை கண்டித்து ஈரோடு மாவட்டத்தில் டிசம்பர் மாதம் 17-ந் தேதி இந்து முன்னணி சார்பில் மாநாடு நடைபெறும்' என்றார்.


Next Story