மணிப்பூர் கலவரத்தை கண்டித்து மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம்


மணிப்பூர் கலவரத்தை கண்டித்து மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம்
x

மணிப்பூர் கலவரத்தை கண்டித்து மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரோடு

மணிப்பூர் கலவரத்தை கண்டித்து மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சத்தியமங்கலம்

மணிப்பூர் கலவரத்தை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சத்தியமங்கலம் பஸ் நிலையம் அருகே நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு முன்னாள் எம்.எல்.ஏ. பி.எல். சுந்தரம் தலைமை தாங்கினார். சத்தியமங்கலம் நகராட்சி தலைவரும், நகர தி.மு.க. செயலாளருமான ஆர்.ஜானகிராமசாமி முன்னிலை வகித்தார்.

இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த ஸ்டாலின் சிவக்குமார், ஜமீஷ், நடராஜ், முருகன், சத்தியமங்கலம் நகர காங்கிரஸ் தலைவர் ச.மா.சிவக்குமார், நகர ம.தி.மு.க. செயலாளர் ஆர்.ராஜேஷ், விடுதலை சிறுத்தைகள் கட்சி தொகுதி செயலாளர் தம்பி ராஜன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், பா.ம.க., ஆதி தமிழர் பேரவை, தமிழ் புலிகள் கட்சி, அ.ம.மு.க, தே.மு.தி.க., எஸ்.டி.பி.ஐ., மனிதநேய ஜனநாயக கட்சியினர் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் சத்தியமங்கலம் வடக்குப்பேட்டையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் தாலுகா செயலாளர் கே.எம். விஜயகுமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோபி

இதேபோல் கோபி பஸ் நிலையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு தாலுகா கமிட்டி உறுப்பினர் துரைசாமி தலைமை தாங்கினார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

பெருந்துறை

பெருந்துறை - பவானி ரோடு அண்ணா சிலை சந்திப்பு அருகே இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு பெருந்துறை ஒன்றிய செயலாளர் செந்தில் குமார் தலைமை தாங்கினார். இதில் ஈரோடு மாவட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சி செயலாளர் திருநாவுக்கரசு, பேரூராட்சி முன்னாள் கவுன்சிலர் கே.ஆர்.தங்கவேல், வக்கீல் துளசிமணி உள்பட பலர் கலந்துகொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

அந்தியூர்

அந்தியூர் பஸ் நிலையம் அருகே ரவுண்டானா பகுதியில் தமிழ் புலிகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு வேங்கை பொன்னுசாமி தலைமை தாங்கினார். குருசெம்பன் முன்னிலை வகித்தார்.

வீரக்குயிலு பேரவை செயலாளர் நந்தினி, அம்மாபேட்டை ஒன்றிய செயலாளர் கரும்புலி, அந்தியூர் ஒன்றிய செயலாளர் மணிகண்டன், பொதுச்செயலாளர் பேரறிவாளன், மாநில கொள்கை பரப்பு செயலாளர் ஆதி வீரன், மேற்கு மண்டல செயலாளர் அப்துல்லா, மேற்கு மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பவானி

பவானி சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் கமிட்டி சார்பில் பவானியில் அந்தியூர் பிரிவு சாலையில் மெழுகுவத்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு பவானி நகர தலைவர் கோபாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் கே.ஆர்.பூபதி, விஜய் ஆனந்த குமார், வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் நாகராஜ், சதாசிவம், விஜயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஈரோடு வடக்கு மாவட்ட தலைவர் சரவணன் பேசினார்.

இதில் மாநில செயலாளர் குறிச்சி சிவக்குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.ஆர்.சண்முகம், கட்சியின் மூத்த நிர்வாகிகள் யு.ஏ. ராமராஜ், முன்னாள் நகர தலைவர் கதிர்வேல், கோபால், சுப்பிரமணி, தமிழ்செல்வன் மற்றும் பவானி வட்டார காங்கிரஸ் துணைத்தலைவர் செந்தில் ராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story